பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தொல்காப்பியம் நுதலியபொருள் தெழுவளியிசையாகிய எழுத்துக்களுக்கு அளபுகூறின் அஃது எல்லார்க்கும் நன்ருக விளங்காதெனக் கருதிய தொல்காப்பியனர் புறத்தெழுந்திசைக்கும் மெய்தெரிவளியிசையாகிய எழுத்துக் களுக்கே மாத்திரை கூறுவாராயினர். உந்துயிலெழுந்த காற்றினைக் கூறுபடுத்தி மாத்திரை கூட்டிக்கொள்ளுதலும், மூலாதாரம் முதலாகக் காற்றெழுமாறு கூறுதலும், அந்தணர் மறைக்கு உளதென்று கூறிய இவ் வாசிரியர், அவர் மதம் பற்றிப் பெறுவதோர் பயனின்றென இச் சூத்திரத்தால் உய்த்துணர வைத்தலின், இச்சூத்திரம் பிறன் கோட்கூறல் என்னும் உத்திக்கினம் என்ருர் நச்சிஞர்க்கினியர். 4. புணரியல் மொழிகள் தம்மிற் புணர்தற்குரிய கருவியின் இயல்பினைக் கூறுதலின் இது புணரியல் என்னும் பெயர்த்தாயிற்று. இவ் வியலிற் கூறப்படும் விதிகள் பின்வரும் இயல்களிற் கூறப்படும் செய்கைபற்றிய் விதிகளுக்குப் பயன்படுதலின் கருவிகளெனப் iii.--sof. தமிழ் நெடுங்கணக்கிலுள்ள முப்பத்து மூன்றெழுத்துக்களுள் இருபத்திரண்டெழுத்துக்கள் மொழிக்கு முதலாமெனவும், இரு பத்து நான்கெழுத்துக்கள் மொழிக்கு ஈருமெனவும், எல்லா மொழிகளுக்கும் இறுதியும் முதலுமாவன மெய், உயிர் என்னும் இவ்விருவகையெழுத்துக்களெனவும், மொழியிறுதியில் நின்ற மெய்யெல்லாம் புள்ளிபெற்று நிற்குமெனவும், மொழியிறுதியி லுள்ள குற்றியலுகரமும் மெய்யின் தன்மையை யுடையதாமெனவும், மொழியிருய் நின்ற உயிர்மெய் உயிரீற்றின் தன்மையையுடையதா மெனவும் இவ்வியலில் முதல் 4-வரையுள்ள சூத்திரங்கள் கூறுகின்றன.