பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 தொல்காப்பியம் நுதலியபொருள் என்னும் ஆரும் எனத் தொல்காப்பியர்ைக்கு முற்பட்ட தமிழிய னூலார் வகைப்படுத்தியுள்ளார்கள். வேற்றுமையுருபுகள் புணரும் நிலைமைக்கண் பெயரின் பின்னிடத்தே நிற்றற்குரியன. உருபேற் கும் பெயர்கள் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் என இருவகைப்படும். அவை வேற்றுமையுருபோடு பொருந்துங்கால் பெயர்க்கும் வேற்றும்ையுருபிற்குமிடையே சாரியை மிகும். சாரியை களாவன இன் வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு, அன் எனவரும் இவ்வொன்பதும் இவைபோல்வன பிறவும் ஆம். இன் சாரியை இகரங்கெட்டு னகரமெய் மட்டும் நிற்றலும், னகரங் கெட்டு இகரவுயிர் மட்டும் நிற்றலும், னகரம் றகரமாகத் திரிந்து நிற்றலும் ஆகிய மூன்று திரிபுடையதென்றும், வற்றுச் சாரியை முதற்கணுள்ள வகரமெய் கெட அற்று எனத்திரியுமென் றும், இன், ஒன், ஆன், அன் என்னும் இச்சாரியைகளின் னகரம் றகரமாய்த் திரிதலுண்டென்றும், அகரவீற்றுச் சொல்முன் வரும் அத்துச்சாரியை அகரங்கெட ‘த்து என நிற்குமென்றும், இகர ஐகார வீற்றுச் சொல்முன்வரும் இக்குச் சாரியை இகரங்கெட 'க்கு என நிற்குமென்றும், வல்லெழுத்து முதன்மொழி வருங்கால் அக்குச் சாரியை இறுதிக் குற்றியலுகரமும் அதலூைரப்பட்ட ககரமெய்யும் அக்ககர மெய்யின்மேல் நின்ற ககர மெய்யும் ஒருசேரக்கெட 'அ' எனத் திரிந்து நிற்குமென்றும், கசத வரு மொழியாய் வருங்காலத்து அம் சாரியையின் மகரம் முறையே ங் ஞ ந எனத் திரிதலும், மெல்லெழுத்தும் இடையெழுத்தும் வருமொழியாய் வருங்காலத்துக் கெடுதலுமாகிய நிலைமைத் தென்றும், சொற்கள் பெயருந் தொழிலுமாய்ப் பிரிந்தும் பெயரும் பெயருமாய்க்கூடியும் இசைப்ப வேற்றுமையுருபு விரிந்து நிற்கு மிடத்தும் மறைந்து நிற்குமிடத்தும் மொழிகளைப் பிரித்துக் ாணுங்கால் பெயர்க்கும் வேற்றுமையுருபிற்கு மிடையே வந்து நிற்றல் சாரியையின் இயல்பென்றும் சாரியையின் இலக்கணத் தின ஆசிரியர் தெளிவாக வரையறுத்துக் காட்டியுள்ளார்.