பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧4 தொல்காப்பியம் நுதலியபொருள் விளக்கங் கூறுவர். குற்றியலுகரமும் அற்றென மொழிப' என முன்னர் மாட்டேறு கூறினமையால் மெய்யீற்றின்முன் உயிர் தனித்து நில்லாதவாறு போன்று குற்றியலுகரவீற்றின் முன்னும் உயிர் தனித்து நில்லாது அக்குற்றியலுகரத்தோடு பொருந்தி நிற்கும் எனத் தொல்காப்பியனர் உய்த்துணர வைத்தமை பெறப்படும். உயிரீற்றின்முன் உயிர்முதன்மொழி வருமிடத்து உயிரோடு உயிர்க்குக் கலந்து நிற்கும் இயல்பின்மையால் இரு மொழிகளும் ஒட்டி நில்லாது விட்டிசைப்பனவாம். நிலைமொழியீற்றிலும் வரு மொழி முதலிலும் நிற்கும் அவ்விரண்டுயிர்களும் உடம்படுதற் பொருட்டு அவற்றிடையே யகர வகரங்களுள் ஒன்று உடம்படு மெய்யாய் வரும் உடம்படாத இரண்டுயிர்களும் உடம்படுதற் பொருட்டு இடையே தோன்றும் மெய் உடம்படுமெய் என வழங் கப்படும். உடன்பாடு, உடம்பாடு என மருவி வழங்கியது வரு முயிர்க்கு உடம்பாக அடுக்கும் மெய் உடம்படுமெய் எனப் பொருள் கோடலுமுண்டு. எல்லா மொழிக்கும் இறுதியும் முத லும் உயிர் வரும்வழி அவற்றிடையே உடம்படுமெய் பெறுதலை விலக்கார் எனத் தொல்காப்பியனுர் கூறுதலால் அவர் காலத்து உயிரீற்றின் முன் உயிர் முதன்மொழி வந்து புணருங்கால் உடம் படுமெய் பெற்றே வரவேண்டுமென்னும் வரையறையில்லை யென்பது நன்கு புலனுகும். உடம்படுமெய்யாக வருதற்குரிய எழுத்துக்கள் இவையெனத் தொல்காப்பியனர் கூருது போயி னும் அவரியற்றிய இயற்றமிழ் நூலாகிய இத் தொல்காப்பியத் திலும் இதற்குப்பின் தோன்றிய தமிழ் நூல்களெல்லாவற்றிலும் யகர வகரங்களே உடம்படுமெய்யாக ஆளப்பெற்றுள்ளமை காணலாம். "உடம்படு மெய்யே யகார வகாரம், உயிர் முதன் மொழி வருஉங்காலையான” என நச்சிஞர்க்கினியர் காட்டிய பழஞ்சூத்திரம் யகர வகரங்களே உடம்படுமெய்யாய் வருதற்குரியன என்பதைத் தெளிவாக விளக்குதல் காண்க. உயிர்களுள் இகர