பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை மரபு #3 ஈகார ஐகார வீறுகள் யகர வுடம்படுமெய் கொள்ளும் எனவும், ஏகாரவீறு யகர வகரங்களுள் ஒன்றை உடம்படுமெய்யாகப் பெற்றுவரும் எனவும், ஏனைய வுயிரீறுகள் யாவும் வகர வுடம்படு மெய்யே பெறும் எனவும் இளம்பூரணரும் நச்சினர்க்கினியரும் வகைபெற விளக்கியுள்ளார்கள். எழுத்தால் ஒன்றுபோலத் தோன்றிச் சொல்லால் வேறு பட்டுப் பொருள் விளங்கி நிற்கும் புணர்மொழிகள் ஓசை வேறு பாட்டற் பிரிந்து புணர்ச்சி வேறுபடுதல் சொல்நடையின் நிலை பெற்ற பண்பாகும். இவ்வாறு வரும் புணர்மொழிகள் குறிப்பின லுணரும் பொருளையுடையன. எழுத்து வகையால் இத்தன்மைய எனத் தெளிவாக வுணரும் முறைமையை யுடையன அல்ல. எடுத்துக்காட்டாகச் செம்பொன் பதின் ருெடி என்னும் புனர் மொழி பொன்னப்பற்றிய பேச்சின்கண் எடுத்தாளப்பட்டால் செம்பொன்-பதின்ருெடி எனப் பிரிந்தும், செம்பைக் குறித்து நிகழும் பேச்சில் எடுத்தாளப்பட்டால் செம்பு-ஒன்பதின்ருெடி எனப் பிரிந்தும் ஒசை வேறுபட்டு வேறுவேறு பொருளுணர்த்தி நிற்றல் காணலாம். இவற்றின் இயல்பினை இவ்வியலின் ஈற்றி லுள்ள இரண்டு சூத்திரங்களாலும் ஆசிரியர் அறிவுறுத்துகின்ருர், எனவே அவர் காலத்து இங்ங்ணம் நுண்ணிதாகப் பொருளுணர்த் தும் புணர்மொழிகள் பெருக வழங்கினமை நன்கு புலகுைம். 3. தொகை மரபு உயிரையும் மெய்யையும் இறுதியாகவுடைய சொற்களைப் பின்வரும் இயல்களில் ஈறுகள்தோறும் தனித்தனியே விரித்தோதி முடிக்கக் கருதிய ஆசிரியர், பல வீறுகளுக்கும் பொதுவான விதிகளே இவ்வியலில் ஒவ்வோர் சூத்திரங்களால் தொகுத்து முடிபு கூறுகின்ருர், அதல்ை இவ்வியல் தொகைமரபு என்னும் பெயர்த்தாயிற்று. நிலைமொழி வருமொழிப் புணர்ச்சிகட்படும் இலக்கணங்களாய்த் தொன்றுதொட்டு வரும் இலக்கண மரபு