பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருபியல் 17 இரட்டித்தல் ஆகிய நிலைமொழிக்கரு வியும், இவற்றிற்கு உருபியலை நோக்கியதோர், வருமொழிக் கருவியும், உகரமொடு புணரும் மெய்யீற்றுச் சொற்கள் யகரமும் உயிரும் வருமொழியாய் வரின் அவ்வுகரம் பெருது இயல்பாம் என்னும் வருமொழிச் செய்கையும், அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயரும் தம்மிற் புணருமாறும், அளவுப்பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் முதலா தற்குரிய வெழுத்துக்கள் க ச த ப ந ம வ அ உ என்னுமிவ் வொன்பதுமே யென்னும் வரையறையும், மேலே கூறப்பட்டன வற்றிற்குப் புறனடையும், யாவர் என்பது யார் எனவும் யாது என்பது யாவது எனவும் வரும் மருஉ முடியும் இவ்வியலில் உணர்த்தப்பட்டன. 6. உருபியல் வேற்றுமையுருபுகள் பெயர்களோடு பொருந்தும் முறைமை யினை யுணர்த்துவது உருபியலாகும். இதன்கண் முப்பது சூத்திரங் கள் உள்ளன. பெயரும் அதனல் ஏற்கப்படும் வேற்றுமையுருபும் ஆகிய அவ்விரண்டிற்கும் இடையே வரும் சாரியைகள் இவை யென்பதும், வேற்றுமையுருபினை யேற்குங்கால் பெயர்கள் பெறும் இயல்பும் திரியுமாவன இவை யென்பதும் இவ்வியலில் வகுத்து விளக்கப்பெற்றுள்ளன. உயிர்களுள் அ ஆ உ ஊ எ ஒள என்னும் ஆறினையும் ஈருக வுடைய பெயர்களும், மெய்களுள் ஞகர நகரவீற்றுப் பெயர் களும், தெவ் என்னும் வகரவீற்றுப் பெயரும், மகரவீற்றுப் பெயர்கள் சிலவும், குற்றியலுகர வீற்றுப் பெயர்களும் உருபேற் குங்கால் இடையே இன்சாரியை பெறுவன. பன்மைப் பொருளைக் கருதின அகர வீற்றுப் பெயர்களும், யா என்னும் ஆகாரவீற்று வினப்பெயரும், அவை, இவை, உவை, யாவை, அவ், இவ், உவ் என்பனவும் வற்றுச்சாரியை