பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 3 தொல்காப்பியம் நுதலியபொருள் பெற்று உருபேற்பன. யாவை என்னும் வினப்பெயர் வற்றுச் சாரியை பெறுங்கால் அப்பெயரின் ஈற்றில் நின்ற ஐகாரமும் அதலூைரப்பட்ட வகரமெய்யும் கெட்டு முடியும். எல்லாம் என்னும் பொதுப்பெயர் அஃறிணைக்கண்வரின் வற்றுச்சாரியையும், உயர் திணைக்கண்வரின் நம் சாரியையும் பெறுவதுடன் வேற்றுமை புருபின் இறுதியில் உம் சாரியையும் பெற்றுமுடியும். அது, இது, உது எனவரும் உகரவீற்றுச் சுட்டுப்பெயரும், ஏழ் என்னும் ழகரவீற்று எண்ணுப்பெயரும், குற்றியலுகரவீற்றுள் வரும் எல்லா எண்ணுப்பெயர்களும், யாது என்னும் வினப் பெயரும், அஃது, இஃது, உஃது எனவரும் சுட்டுப்பெயர்களும் அன்சாரியை பெற்று உருபேற்பனவாம். அன்சாரியை பெறுங்கால் அது, இது, உது என்பன இறுதியுகரங் கெட்டு முடிவன: அஃது, இஃது, உஃது என்பன ஆய்தங்கெட்டு முடிவன. பஃதென் பதனை யிறுதியாகவுடைய ஒருபதுமுதல் எண்பது வரையுள்ள எண்ணுப்பெயர்கள் எட்டும், அன்சாரியையேயன்றி ஆன்சாரியை பெறுதலும் உண்டு. ஆன்சாரியை பெறுங்கால் நிலைமொழியி லுள்ள பஃதென்பதன்கண் பகரமெய்மட்டும் நிற்க அஃதென்பது கெடும். ஓகார வீற்றுப்பெயர் உருபேற்குங்கால் ஒன்சாரியைபெறும். அகர ஆகார வீற்று மரப்பெயர்கள் ஏழாமுருபு பெறும்வழி அத்துச்சாரியைபெறும். மகரவீற்றுப் பெயர்கள் உருபேற்குங்கால் அத்துச்சாரியை பெறுவன. அழன், புழன் என்பன அத்தும் இன்னும் பெற்று உறழ்வன. நீ என்னும் பெயர் நின் எனத்திரிந்து உருபேற்கும். மகர வீற்றுள் நும் என்பதும் தாம், நாம், யாம் என்பனவும் அத்தும் இன்னும் பெருது இயல்பாய் முடிவன. யாம் என்னும் பெயரில் யகரத்தின்மேலேறிய ஆகாரம் எகரமாகத் திரிய அங்கு நின்ற