பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் மயங்கியல் 19 யகரம் கெடும். தாம், நாம் என்பன முதல்குறுகி முறையே தம் நம் என நிற்கும். எல்லாரும் என்னும் படர்க்கைச் சொல்லிடத் தும் எல்லீரும் என்னும் முன்னிலைச் சொல்லிடத்தும் இறுதியில் நின்ற உம் என்பது கெட, அவ்விருபெயரும் முறையே தம் சாரியையும் நம் சாரியையும் பெற்று உருபேற்கும். அவைபெறும் உருபின் பின்னர் உம் சாரியை வந்து பொருந்தும் னகர வீற்றுள் தான் என்பது முதல்குறுகித் தன் என்றும் யான் என்பது முதற்கண் நின்ற யகரங்கெட்டு அதனையூர்ந்து நின்ற ஆகாரம் எகரமாகி என் என்றும் திரிந்து உருபேற்கும். நெடிற்ருெடர்க் குற்றியலுகரங்களுள் (டற) ஒற்றிரட்டிக்குஞ் சொற்கள் உருபேற்குங்கால் இன்சாரியைபெருது இயல்பாவன. குற்றுகரவீற்றுத் திசைப்பெயர்கள் கண்ணுருபினை ஏற்குங் கால் இன்சாரியை பெருது இயல்பாதலுமுண்டு. இவ்வாறு இயல் பாயவழி இறுதியிலுள்ள குற்றியலுகரம் தான் ஊர்ந்து நின்ற மெய் யோடு சேரக்கெடும். இங்கு எடுத்துரைக்கப்பட்ட பெயர்களல்லாத ஏனைய பெயர் கள் சாரியை பெற்றே உருபேற்றல் வேண்டுமென்னும் வரை யறையில்லாதனவாம். அவை சாரியை பெற்றும் பெருதும் முடிவனவாம். 7. உயிர் மயங்கியல் உயிரீறு நின்று வல்லெழுத்தோடும் சிறுபான்மை ஏனை யெழுத்துக்களோடும் புணருமாறு கூறுவது உயிர் மயங்கிய லாகும். மயங்குதல் - கலத்தல். உயிரும் புள்ளியும் இறுதியாகிய உயர்திணைப் பெயர்கள் அல்வழி வேற்றுமையாகிய இரு வழி யிலும் இயல்பாமெனவும், ஒரு சில விடங்களில் அஃறிணை விரவுப் பெயர் இயல்பாதலுமுண்டெனவும் தொகை மரபில் விதந்து