பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தொல்காப்பியம் நுதலியபொருள் மக, ஆடுஉ, மகடுஉ சே என்பன இன்சாரியைபெறும். நிலா அத்துச்சாரியைபெறும். பனி (காலம்), வளி(பூதம்),மழை என்பன அத்துச்சாரியையும் இன்சாரியையும் பெறுவன. புளி, எரு, செரு, பனே, அரை, ஆவிரை என்பன அம்சாரியைபெறுவன. இ.கா ஐகார வீற்று நாட் பெயர்முன் தொழிற்சொல்வரின் இடையே ஆன்சாரியை வரும். அவ்விரண்டிற்றுத் திங்கட் பெயர் முன் தொழிற்சொல்வரின் இடையே இக்குச்சாரியை வரும். ஊவென்னும் ஒரெழுத்தொருமொழி னகரவொற்றும் அக்குச் சாரியையும் பெறும். அ, ஈ, உ, ஐ, ஒ என்னும் ஈறுகளுக்கு உருபியலிற் கூறப் பட்ட சாரியைகளை இவ்வியலிலுள்ள 18, 51, 61, 79, 92-ஆம் சூத்திரங்களால் அவ்வீற்றுப் பொருட் புணர்ச்சிக்கும் மாட்டெறிந்து விதி கூறுவர் ஆசிரியர். 'சாவ என்பதன் வகரவுயிர்மெய்யும் 'வாழிய' என்பதன் யகரவுயிர்மெய்யும் கெட்டு முடியும். நாழி என்பதன்முன் உரி யென்னுஞ்சொல் வந்து புணரின் நிலைமொழியீற்றின் இகரம் தான் ஏறிய ழகர மெய்யுடன் கெட அவ்விடத்து டகர மெய் தோன்றி முடியும். செரு என்பதன் முன்வரும் அம்சாரியையின் மகரங்கெட வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும். பனை, ஆவிரை என்பன அம்சாரியை பெறுங்கால் இறுதி ஐகாரங்கெட்டு முடிவன. பனை என்னுஞ்சொல்முன் அட்டு என்பது வருமொழியாய்வரின் நிலை மொழியிறுதி ஐகாரங்கெட அவ்விடத்து ஆகாரம் தோன்றும். பல சில என்பவை தம் முன்னர்த் தாம்வரின் இறுதி நின்ற லகர வுயிர்மெய் லகரவொற்ருகத் திரியும். இன்றியென்பதன் இறுதி யிகரம் செய்யுளுள் உகரமாகத்திரியும். சுட்டுப் பெயரீற்று உகரம் அன்று என்பதைேடு புணருங்கால் ஆகாரமாகத் திரிதலும் ஐயென்பதனேடு புணருங்கால் கெடுதலும் செய்யுளிடத் துண் டாகுந் திரிபுகளாம். வேட்கை யென்னுஞ்சொல்முன் அவா என்பது வந்து புனரின் நிலைமொழியீற்றிலுள்ள ஐகாரம் தான்