பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தொல்காப்பியம் நுதலியபொருள் முடியும். மகரவீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் இறுதி மகரம்கெட வல்லெழுத்து மிக்கு முடியும். இங்ங்ணம் மகர வீறுகெட்ட விடத்து வருமொழி வல்லெழுத்தோடு மெல்லெழுத்து உறழ்ந்து முடியும் மொழிகளும் சில உள. ஆயிரம் என்பதன்முன் அளவுப்பெயர் வந்து புணருமிடத்து வேற்றுமையிற்போல இறுதி மகரங்கெட்டு வல்லெழுத்து மிகும். இல்லம் என்னும் மரப்பெயர் இறுதி மகரங் கெட்டு மெல்லெழுத்து மிகும். அழன் என்பதன் இறுதிகெட வருமொழி வல்லெழுத்து மிக்குமுடியும். வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்வரும் யரழ வீற்றுப் பெயர்கள் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து அவ்வல் லெழுத்து மிக்கு முடிவன. தாய் என்னுஞ்சொல்முன் மகன் வினை வரின் வல்லெழுத்து மிகும். ஆர், வெதிர், சார், பீர், குமிழ் என்னுஞ் சொற்கள் வல்லெழுத்து வருவழி மெல்லெழுத்து மிக்கு முடிவன. வேற்றுமைக்கண் யகர வீற்றுட் சிலவும் சார், பாழ் என்பனவும் வல்லெழுத்தோடு மெல்லெழுத்துப்பெற்று உறழ்வன வாம். கீழ் என்னுஞ்சொல் வல்லெழுத்துப்பெற்றும் பெருதும் உறழும். ஆண், பெண், உமண், முரண், குயின், எகின், தான், பேன், கோன் என்பனவும் நெட்டழுத்தின் பின்வரும் லகார, ளகார வீற்றுப்பெயர்கள் சிலவும் திரியாது இயல்பாவனவாம். தாய் என்னும் பெயரும் அல்வழிக்கண்வரும் யகார வீற்றுப் பெயர்களும் வல்லெழுத்து மிகாது இயல்பாவன. அல்வழிக்கண்வரும் எல்லாரும், தாம், நாம், யாம், தான் என்பன குறுகலுந் திரிதலு மின்றி இயல்பாவன. நூருயிரம், தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பவற்ருேடும் ஏனை உயிர் முதன்மொழிகளோடும் புணரும் ஏழ் என்னும் எண்ணுப்பெயரும், உயிர் முதன்மொழிகளோடும் யகர வகர முதன்மொழிகளோடும் புணரும் வகர வீற்றுச் சுட்டுப்பெயர் களும் குறுகலுந் திரிதலுமின்றி இயல்பாவனவாம்.