பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புள்ளி மயங்கியல் 25 ஆண், எகின், பீர், பூல், வேல், ஆல், குமிழ் என்பன அம்சாரியையும், வேற்றுமைக்கண்வரும் ஈம், கம் என்பனவும், கோல் என்பதைேடு புணரும் தாழ் என்னுஞ் சொல்லும், தமிழ் என்னும் சொல்லும் அக்குச்சாரியையும், வெயில், இருள் என்பன அத்துச்சாரியையும் இன்சாரியையும், மகரவீற்று நாட்பெயர் இகர வீற்று நாட்பெயர்போல ஆன்சாரியையும் அதன்மேல் அத்துச் சாரியையும், செய்யுளிடத்துவரும் விண் என்னுஞ்சொல் வினைச் சொல் வருமொழியாக வருமிடத்து அத்துச்சாரியையும், தனித்தும் அடையடுத்தும் வரும் ஆயிரம் என்ற எண்ணுப்பெயர் பிற எண் களோடு புணருமிடத்து அத்துச்சாரியையும் பெறுவன என்பர் ஆசிரியர். எல்லாரும் என்னும் படர்க்கைப்பெயரும், எல்லீரும் என்னும் முன்னிலைப்பெயரும், நெடுமுதல் குறுகி முடியுமியல்புடைய தாம், நாம், யாம் என்னும் பெயர்களும், னகர வீற்றுள் தான், யான் என்னும் பெயர்களும் சாரியைபெறுவன ஈறுகெட்டு இடையிலும் இறுதியிலும் சாசியைபெற்றும், நெடுமுதல் குறுகுவன நெடுமுதல் குறுகியும், உருபு புணர்ச்சிக்கண் முடிந்தவாறே வேற்றுமைப் பொருட் புணர்ச்சியினும் முடியும்என ஆசிரியர் மாட்டேற்று முறை யான் விதிகூறியுள்ளார். எல்லாம் என்னும் விரவுப்பெயர் வேற்று மைப் பொருட் புணர்ச்சிக்கண் இடையே வற்றுச்சாரியையும் இறுதியில் உம்சாரியையும் பெறும். அப்பெயர் அல்வழிக்கண் சாரியைபெருது. உயர்திணைக்கண் இடையே நம் சாரியையும் இறுதியில் உம்சாரியையும்பெறும். வகர வீற்றுச் சுட்டுப்பெயர் வற்றுச்சாரியைபெறும். ஏழ் என்னும் எண்ணுப்பெயர் அன்சாரியை பெறும். னகர ளகர வீறுகள் வல்லெழுத்து முதன்மொழி வருங்கால் டகரமாகவும், னகர லகர வீறுகள் றகரமாகவும் திரிவன. எள்ளே யுணர்த்தும் எண் என்னும் பெயரின் ணகரம் அல்வழியிலும் டகர