பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தொல்காப்பியம் நுதலியபொருள் மாகத்திரியும். நெல், செல், கொல், சொல் என்பவற்றின் லகரம் அல்வழியிலும் றகரமாய்த்திரியும். அல்வழிக்கண்வரும் ளகரவீறு திரிந்தும் திரியாதும் உறழ்ந்து முடியும். வேற்றுமையிற்போல அல்வழியிலும் டகரமாகத்திரியும் ளகர வீறுகள் சிலவுள. மன், சின், ஆன், ஈன், பின், முன் என்பனவும் செயின் என்னும் வினையெச்சமும் அவ்வயின், இவ்வயின், உவ்வயின், எவ்வயின் எனவரும் ஏழாம் வேற்றுமை யிடப்பொருளுணர்த்தும் இடைச் சொற்களும் ஆகியவற்றின் னகரம் றகரமாகத்திரியும். மீன் என்பதன் னகரம் றகரமாகத்திரிந்தும் திரியாதும் உறழும். லகர ளகர வீற்றுச்சொற்கள் தகரமுதன்மொழி வருமிடத்து லகர, ளகரங்கள் ஆய்தமாகத்திரியும். மெல்லெழுத்து முதன்மொழி வருங்கால் முறையே லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரிவன. மகரவீறு அல்வழிக்கண் வலிவரின் ஏற்றமெல்லெழுத் தாகத் திரியும். அகம் என்னுஞ் சொல்லின்முன் கை என்பது வருமொழியாய்வரின் நிலமொழியின் நடுவெழுத்தாகிய ககர வுயிர் மெய்கெட மெல்லெழுத்து மிக்கு முடியும். நும் என்பதனை அல்வழிக்கண் கூறுங்கால் நகரவொற்றின்மேல் நின்ற உகரம் கெட அவ்வொற்றின்மேல் ஈகாரம் ஊர்ந்து நீ என்ருகி ஓர் இகரம் இடையில்வர இறுதி மகரங்கெட்டு ரகர வொற்றுத் தோன்றி நீயிர் எனத்திரியுமென்பர் தொல்காப்பியர். எனவே நும் என்பதே திரிபில் சொல்லென்றும் நீயிர் என்பது அதன் திரியென்றுங் கொள்ளுதல்வேண்டும். தேன் என்னுஞ்சொல், வலிவரின் னகரம் றகரமாகத் திரிந்தும் திரியாதும் உறழ்தலும், இறுதி னகரங்கெட்டு வலி மெலி மிகுதலும், மெலிவரின் இறுதிகெட்டும் கெடாதும் உறழ்