பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தொல்காப்பியம் நுதலியபொருள் 9 குற்றியலுகரப் புணரியல் குற்றியலுகரவீறு நின்று வருமொழியோடு புணரும் இயல் பினை யுணர்த்துவது இவ்வியலாகும். நெட்டெழுத்தின் பின்னும் தொடர்மொழியீற்றும் குற்றியலுகரம் வரும் என மொழிமரபிற் கூறினர். தொடர்மொழியீற்றுக் குற்றுகரத்தை அயலிலுள்ள எழுத்து வகையால் உயிர்த்தொடர், இடைத்தொடர், ஆய்தத் தொடர், வன்ருெடர், மென்ருெடர் என ஐந்தாகப்பகுத்து, அவற்ருெடு நெட்டெழுத்தின் பின்வருங் குற்றுகரத்தையுங் கூட்டி அறுவகைப்படுத்து விளக்குகின்ருர், யரழமுன்னர்க் கசதபங்ளுநம் ஈரொற்ருகிவருங் குற்றுகரங் கள் ஒருவாற்ருன் இடையொற்றுக்களோடு தொடர்ந்துவரினும் குற்றியலுகரத்தையடுத்து நேரே தொடர்ந்தன அல்லவாதலின் அவை இ ைட த் .ெ த ர ட ரா. க க் கொள்ளப்படாவென்றும், ஆறீற்றுக் குற்றியலுகரமும் இருவழியிலும் கெடாது நிறைந்தே நிற்குமென்றும், வன்ருெடர்க்குற்றியலுகரம் வல்லெழுத்து முதன் மொழி வருமிடத்து முன்கூறிய (அரைமாத்திரையினுங் குறுகும்) இயல்பில் நிற்றலுமுரித்தென்றும், குற்றியலுகர வீற்றின்முன் யகர் முதன்மொழி வருமிடத்து ஈற்றிற் குற்றியலுகரங்கெட அங்கு ஓர் இகரம் வந்து குறுகி நிற்குமென்றும் இவ்வியலின் முதல் ஐந்து சூத்திரத்தானும் குற்றியலுகரத்தியல்பினை ஆசிரியர் பொதுவகை யாற் கூறிப்போந்தார். 6-முதல் 17-வரையுள்ள சூத்திரங் களால் குற்றுகரவீற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சி கூறினர். 18-முதல் குற்றுகரவீற்று அல்வழிப்புணர்ச்சியினைத் தொடங்கிக் கூறுகின்ருர், உண்மைத் தன்மையை யுணர்த்தும் உண்டு என்னுஞ்சொல் வல்லெழுத்து முதன்மொழிவரின் இறுதிநின்ற உகரம் மெய் யொடுங்கெட் ணகரம் ளகரமாகத் திரியுமென்றும், குற்றுகர வீற்றுத் திசைப்பெயர்களுள் இரண்டு பெருந்திசையும் தம்மிற்