பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றியலுகரப் புணரியல் 29 புணருமிடத்து ஏயென்னுஞ்சாரியை இடையே வந்துமுடியு மென்றும், குற்றுகரவீற்றுப் பெருந்திசைகளோடு கோணத் திசைகள் புணருமிடத்து இறுதியுகரம் மெய்யொடுங்கெடுமென்றும் அவ்வழி தெற்கு என்பதன் றகரம் னகரமாகத் திரியுமென்றும் கூறுவர் ஆசிரியர். குற்றுகர வீற்று எண்ணுப் பெயரியல்பினை 28-ஆம் சூத்திர முதலாகத் தொடங்கிக் கூறுகின்ருர். பத்து என்னும் எண்ணின் முன் ஒன்றுமுதல் எட்டுவரையுள்ள எண்களும் ஆயிரமென்னும் எண்ணும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வந்து புணரு முறையினை 28-முதல் 30-வரையுள்ள சூத்திரங்கள் உணர்த்துவன. ஒன்று முதல் எடடுவரையுள்ள குற்றுகர வீற்று எண்ணுப் பெயர் களின்முன் பத்து வந்து புணர்தலை 31-முதல் 38-வரையுள்ள சூத்திரங்கள் குறிப்பிடுவன. ஒன்பது என்னும் சொல்லின்முன் பத்து வந்து புணருங்கால் நிலைமொழியாகிய ஒன்பதில் ஒகரத் திற்கு மேலாகத் தகர மெய்தோன்றித் தொன்பது என்ருகிப் பது கெட்டு னகரம் ணகரமாகத் திரிந்து இரட்டித்துத் தொண்ண் என நிற்குமென்றும், வருமொழியாகிய ப.தென்பதில் பகர வுயிர்மெய்யும் ஆய்தமும்கெட்டு ஊகாரம் தோன்றி இறுதியிலுள்ள 'து' என்பதன் தகரம் றகரமாகத் திரிந்து ஊறு என்ருகித் தொண்ணுறு என முடியுமென்றும், இவ்வியல் 39-ஆம் சூத்திரத் தால் ஆசிரியர் விரித்துரைப்பர். மேற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பது வரையுள்ள எண்ணுப்பெயர்களோடு அளவுப்பெயரும் நிறைப் பெயரும் வந்து புணரு முறையினை 40-முதல் 53-வரையுள்ள சூத்திரங்களாலும், நூறென்னுஞ்சொல் வருமொழியாய் வந்து புணர்வதனை 54, 55, 56, 57-ஆம் சூத்திரங்களாலும், ஆயிரம் என்னும் எண் தனித்தும் நூறென்னும் அடையடுத்தும் புணர்தலே 58-முதல் 65-வரையுள்ள சூத்திரங்களாலும் கூறுவர் ஆசிரியர். ஒன்பது என்னும் எண்ணின்முன் நூறு என்னும் எண் வந்து புணரின் முற்கூறியவாறு நிலைமொழியாய் நின்ற ஒன்பது