பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} தொல்காப்பியம் நுதலியபொருள் என்னும் சொல்லின் ஒகரத்தின் முன்னே தகரமெய் ஒன்று தோன்றித் தொன்பது என்ருகிப் பதுகெட்டு னகரமெய் ளகர மெய்யாக இரட்டித்துத் தொள்ள் என நிற்குமென்றும், வருமொழி யாகிய நூறென்பதன் முதலில் நின்ற நகரமெய் கெட அம் மெய்யின் மேலேறிய ஊகாரம் ஆகாரமாகத்திரிந்து அதனை யடுத்து இகரவுயிரும் ரகரவுயிர்மெய்யும் இடையேதோன்றி ஈற்றி லுள்ள றகர வுகரங்கெட்டு மகரமெய்தோன்றி ஆயிரம் என்ருகித் தொள்ளாயிரம் என முடியுமென்றும் 57-ஆம் சூத்திரத்தால் தொல்காப்பியர்ை விரித்துக்கூறியுள்ளார். தொண்ணுறு, தொள் ளாயிரம் என்னும் புணர்மொழிகளுக்கு ஆசிரியர் தொல்காப் பியனர் கூறும் புணர்ச்சி முறைகள் வலிந்து கூறுவனவாகவே அமைந்துள்ளனவென்றும் ஒன்பது என்னும் பொருள்படத் தொல் காப்பியரே தொண்டு என்னும் எண்ணுப்பெயரைத் தம் நூலில் ஆண்டிருத்தலால் தொண்டு-பத்து = தொண்ணுறு என்றும், தொண்டு-ஆயிரம் = தொள்ளாயிரம் என்றும் நிலைமொழி வருமொழி செய்து புணர்ச்சிவிதி கூறுவதே மொழியியல்புக்கு ஒத்ததாகுமென்றும் பரிதிமாற்கலைஞர் கூறும் கொள்கை இங்கு சிந்திக்கத் தக்கதாகும். நூறு என்பது நிலைமொழியாக அதன் முன் ஒன்று முதல் ஒன்பதும் அவையூர் பத்தும் அளவும் நிறையும் வந்து புணரும் முறையினை 66-முதல் 68-வரையுள்ள சூத்திரங்கள் விளக்குவன வாம். ஒன்று முதல் எட்டினையூர்ந்த பஃதென்னும் எண்ணுப் பெயருடன் ஒன்று முதல் ஒன்பதெண்களும் ஆயிரமும் அளவும் நிறையும் புணரு முறையினை 69, 70, 71-ஆம் சூத்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட் பெயர்கள் புணருமியல்பினை 72, 73-ஆம் சூத்திரங்களாலும் இரண்டு முதல் ஒன்பது வரையுள்ள எண்களின்முன் அளவு, நிறை, எண் என்பவற்றுக்குரிய மா என்னுஞ்சொல் புணர்தலை 74-ஆம் சூத்திரத்தாலும் ஆசிரியர் குறிப்பிடுவர். எண்ணுப்பெயர்