பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றியலுகரப் புணரியல் 3? களுள் மிக்க எண்ளுேடு குறைந்த எண் வந்து புணர்தலே உம்மைத்தொகையாகவும், குறைந்த எண்ளுேடு மிக்க எண் வருதலைப் பண்புத் தொகையாகவும்கொண்டு ஆசிரியர் விதி கூறியுள்ளமை இவண் கருதற்குரியதாகும். லகார ணகார வீற்றுச் செய்யுள் முடிபு கூறுவது 75-ஆம் சூத்திரம். இவ் வதி காரத்து நிலைமொழி வருமொழிசெய்து புணர்க்கப்படா மொழி கள் இவையெனத் தொகுத்துரைப்பது 76-ஆம் சூத்திரமாகும். இவ்வியலின் இறுதியிலுள்ள 77-ஆம் சூத்திரம் எழுத்ததிகாரத்தின் புறனடையாகும்.