பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லதிகாரம் 35 திணைபால்களை விளங்க அறிவிக்கும் முறை தமிழிலன்றி வேறெம் மொழியிலுங் காணப்படாத சிறப்பியல்பாகும். சொல்லிலக்கண வகை முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிய தொல்காப்பியஞர், சொற்களைப் பொருள் நிலைமை நோக்கித் தொடர்மொழி, தனி மொழியென இருவகைப்படுத்து, அத்தொடர்மொழியை அல் வழித்தொடர், வேற்றுமைத்தொடர் என இரு வகைப்படுத்து, அவ்விருவகைத்தொடரும் செப்பும் வினவுமாக நிகழ்தலால் அவற்றை வழுவாமற் கூறுதற்காக முற்படச் சொன்னிலைமையாற் பொருளை உயர்திணை, அஃறிணையென இரு வகைப்படுத்தார். அவற்றுள் உயர்திணையுணர்த்துஞ் சொற்களை ஒருவனே யறியுஞ் சொல், ஒருத்தியை யறியுஞ்சொல், பலரை யறியுஞ்சொல் என மூவகைப்படுத்து, அஃறிணை யுணர்த்துஞ் சொற்களை ஒன்றன யறியுஞ்சொல், பலவற்றையறியுஞ்சொல் என இருவகைப்படுத்து, அமைக்கவேண்டுஞ் சொற்களே யெடுத்தோதினர். அதன்பின் வேற்றுமைத்தொடர் கூறுவார் மயங்கா மரயினவாகி வருவன எழுவகை வேற்றுமையுணர்த்தி, அதன்பின் அவ்வேற்றுமைக்கண் மயங்குமாறுணர்த்தி, அதன்பின் எட்டாவதாகிய விளிவேற்றுமை யுணர்த்தி, அதன்பின் தனிமொழிப் பகுதியாகிய பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பவற்றின் பாகு பாடும் உணர்த்தி, அதன்பின் சொற்கள் விகாரப்படுமாறும் ஒட்டுமாறும் எஞ்சுமாறும் பிறவும் உணர்த்துகின்ருர். எழுத்ததி காரத்துள் எழுவாய் வேற்றுமையையும் அதன் திரிபாகிய விளிவேற்றுமையையும் அல்வழிக்கண்ணே முடித்த ஆசிரியர் இவ்வதிகாரத்தே வேற்றுமைகளுடன் இயைத்து இலக்கணங் கூறுகின்ருர். இச்சொல்லதிகாரம் ஒன்பது இயல்களால் இயன்றதாகும். கிளவியாக்கத்துள் அல்வழித் தொடரும், வேற்றுமையியல்,