பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தொல்காப்பியம் நுதலியபொருள் வேற்றுமை மயங்கியல், விளிமரபு என்னும் மூன்றியல்களிலும். வேற்றுமைத் தொடரும், பெயரியலில் பெயரிலக்கணமும், வினை யியலில் வினையிலக்கணமும், இடையியலில் இடைச்சொல் லிலக்கணமும், உரியியலில் உரிச்சொல்லிலக்கணமும், எச்ச வியலுள் எஞ்சியன பிறவும் உணர்த்தப்பட்டுள்ளன. இவ்வகை யினுல் இவ்வதிகாரத்தின் இயல்களும் ஒன்பதாயின. கிளவியாக்கம் கிளவி-சொல் ஆக்கம்-ஆதல். சொற்கள் பொருள் மேல் ஆமாறுணர்த்தினமையின் கிளவியாக்கமென்னும் பெயர்த் தாயிற்று என இளம்பூரணரும், வழுக்களேந்து சொற்களை அமைத்துக் கொண்டமையால் கிளவியாக்கமாயிற்று எனச் சேனவரையரும் நச்சிஞர்க்கினியரும், சொற்கள் ஒன்ருேடொன்று தொடர்ந்து பொருள்மேல் ஆகும் நிலைமையைக்கூறுவது இவ்வியலாதலின் கிளவியாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று எனத் தெய்வச்சிலை யாரும் இவ்வியலுக்குப் பெயர்க்காரணங் கூறினர். கிளவியது ஆக்கத்தைக்கூறுவது கிளவியாக்கம் என வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகக்கொண்டார் தெய்வச்சிலையார். இவ்வியலின் சூத்திரங்கள் அறுபத்திரண்டென இளம்பூரணர் நச்சிஞர்க்கினியரும், அறுபத்தொன்றெனச் சேன வரையரும், ஐம்பத்தொன்பதெனத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரைகூறியுள்ளார்கள். சொல் உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல் என இரண்டு வகைப்படும். அவற்றுள் உயர்திணைச்சொல் ஆடுஉ வறிசொல், மகடூஉ வறிசொல், பல்லோரறிசொல் என மூவகைப்படும்: இம்மூன்றினையும் முறையே ஆண்பாற்சொல், பெண்பாற்சொல், பலர்பாற்சொல் எனப் பிற்காலத்தார் வழங்குவர். அஃறிணைச் சொல் ஒன்றறிசொல், பலவறிசொல் என இரு வகைப்படும். இவற்றை முறையே ஒன்றன்பாற்சொல், பலவின்பாற்சொல்