பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றுமையியல் 碘覆 வேற்றுமை தாமே ஏழெனமொழிப' விளிகொள்வதன்கண் விளியோடெட்டே' என்ருர் தொல்காப்பியர்ை. எத்தகைய தொழிலும் கருத்தா இல்லாமல் நடைபெருது. ஆதலின் அதனைச்செய்து முடிக்கும் வினை முதற்பொருளைத் தருவதாய்த் திரிபில்லாது நின்றபெயர் எழுவாய் வேற்றுமை யென முதற்கண் வைக்கப்பட்டது. வினைமுதல் ஒருதொழிலைச் செய்யுங்கால் அச்செயலாற் ருேன்றிய பொருள் செயப்படுபொரு ளெனப்படும். இத்தகைய செயப்படுபொருளாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது ஐயுருபாதலின் அஃது இரண்டாம் வேற்றுமையெனப்பட்டது. வினைமுதல் ஒரு காரியத்தைச்செய்து முடித் தற்கு இன்றியமையாது வேண்டப்படுவது கருவி. இத்தகைய கருவிப்பொருளாகப் பெயர்ப்பொருளே வேறுபடுத்துவது ஒடுவுரு பாதலின் அது முன்ரும் வேற்றுமையெனப்பட்டது. ஒருவன் ஒரு காரியத்தைக் கருவியாற் செய்வது தனக்கும் பிறர்க்கும் உதவுதற் பொருட்டேயாம். இவ்வாறு தரப்படும் எவ்வகைப் பொருளையும் ஏற்றுக்கொள்வதாகப் பெயர்ப்பொருளே வேறுபடுத்துவது குவ் வுருபாதலின் அது நான்காம் வேற்றுமை யெனப்பட்டது. ஒருவன் ஒரு பொருளைப் பிறர்க்குக் கொடுக்குங்கால் அப்பொருள் அவனை விட்டு நீங்குதலைக் காண்கின்ருேம். இவ்வாறு நீங்க நிற்கும் பொருளாகப் பெயர்ப்பொருளே வேறுபடுத்துவது இன்னுரு பாதலின் அஃது ஐந்தாம் வேற்றுமையாயிற்று. ஒருவனிடத்து நீங்கிய பொருளை யேற்றுக்கொண்டவன் அப்பொருளைத் தன் னுடையது எனக் கிழமை (உரிமை) பாராட்டக் காண்கிருேம், இத்தகைய கிழமைப் பொருளாகப் பெயர்ப் பொருளே வேறு படுத்துவது அது வுருபாதலின் அஃது ஆரும் வேற்றுமையாயிற்று. மேற்கூறிய எல்லா நிகழ்ச்சிக்கும் இடம் இன்றியமையாதது. தன்னையேற்ற பெயர்ப்பொருளே இடப்பொருளாக வேறுபடுத்து வது கண்ணுருபாதலின் அஃது ஏழாம் வேற்றுமையாயிற்று.