பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தொல்காப்பியம் நுதலியபொருள் இவற்றின் வேருகப் பெயர்ப்பொருளே எதிர்முகமாக்குவது விளி வேற்றுமையாதலின் அஃது எட்டாம் வேற்றுமையென இறுதிக் கண் வைக்கப்பட்டது. மேற்கூறிய எட்டு வேற்றுமைகளையும் முறையே பெயர் வேற்றுமை, ஐகார வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ்வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை, விளி வேற்றுமை எனப் பெயர் தந்து வழங்குதலும், இவற்றுள் ஐகார வேற்றுமை முதல் கண் வேற்றுமை ஈருகவுள்ள ஆறையும் முறையே இரண்டாவது, முன்ருவது, நான்காவது, ஐந்தாவது, ஆருவது, ஏழாவது என எண் முறையாற் பெயரியிட்டு வழங்கு தலும் ஆசிரியர் தொல்காப்பியனுர் காலத்தும் அவர்க்கு முன்னும் வழங்கிய தமிழியற் குறியீடுகளாகும். இவ்வுண்மை இவ்வேற்றுமை யியற் சூத்திரங்களால் நன்கு விளங்குகின்றது. இவ்வியலில் எழுவாய் வேற்றுமை முதலாக ஏழாம் வேற்றுமையிருகவுள்ள ஏழு வேற்றுமைகளின் இலக்கணங்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன. ஏழுவேற்றுமையின் உருபும் உருபுநிற்கும் இடமும் அதன் பொருளும் அப்பொருளின் வகைகளும் ஆகியவற்றை இவ் வியலில் ஆசிரியர் முறையே விளக்கிச் செல்கின்ருர். இங்ங்னம் ஏழு வேற்றுமைகளின் இலக்கணங் கூறுமுகமாகப் பயனிலை கோடலும், உருபேற்றலும், காலந்தோன்ருமையும் ஆகிய இம் மூன்றும் பெயர்க்குரிய இலக்கணங்கள் என்பதனை ஆசிரியர் உய்த்துணர வைத்துள்ளார். மேற்கூறிய வேற்றுமைகளின் பொருள்வகையை விரித் துரைக்குங்கால் காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் என்பன முதலாக இவ்வியலிற்கூறிய பொருள்களேயன்றி இப் பொருளோடு பொருந்தித்தோன்றும் எல்லாச் சொற்களும் கொள்ளுதற்குரியன என்பதை இவ்வியலின் புறனடைச் சூத்திரத் தால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்ருர்,