பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம் தமிழ்மக்களது பேரறிவின் கருவூலமாக இன்று காறும் நின்று நிலவுவது தொல்காப்பியம் என்னும் தமிழிலக்கண நூலா கும். இடைச் சங்கத்தார்க்கும் கடைச் சங்கத்தார்க்கும் நூலா யிற்றுத் தொல்காப்பியம் எனக் களவியலுரையாசிரியராகிய நக்கீரனர் இந்நூலின் பழைமையையும் புலவர் போற்றும் வரம் புடைமையையும் குறித்துள்ளார். இப்பொழுதுள்ள தமிழ் நூல் களெல்லாவற்றிற்கும் தொன்மையிலுைம் ஆழ்ந்த பொருளுடை மையிலுைம் மேம்பட்டுத் திகழ்வது தொல்காப்பியமாகிய இந் நூலேயாம். பின்வந்த தமிழிலக்கண ஆசிரியரெல்லோரும் ஆசிரியர் தொல்காப்பியனுர் வகுத்துரைத்த ஆணையின் வழியே தம் நூல்களை யியற்றி யுள்ளார்கள். “கூறிய குன்றினும் முதனூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்காப் பியன்றன் ஆணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே.” எனப் பல்காப்பியனர் என்னும் பழம்புலவரொருவர் தாம் இயற்றிய பல்காப்பிய நூலிற் கூறிய புறனடைச் சூத்திரம் இவ்வுண்மையினைத் தெளிவுபடுத்துவதாகும். 1. "கடைச் சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக் காயகுர் மகளுர் நக்கீரனர், "இடைச் சங்கத்தார்க்கும் கடைச் சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம்’ என்ருராகலானும் பிற்காலத்தார்க்கு உரையெழுதினேரும் அது கூறிக் கரிபோக்கின ராகலானும் அவர் புலவுத் துறந்த நோன்புடையாராகலாற் பொய் கூரு ராகலானும் என்பது”. (தொல், மரபு 94-ஆம் சூத்திரவுரை, பேராசிரியர்), இறை யனர் களவியல் உரைப்பாயிரம், 2. தொல். மரபு 94-ஆம் சூத்திரம் பேராசிரியர் உரைமேற் கோள்.