பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றுமை மயங்கியல் #3 வேற்றுமை மயங்கியல் ஒரு வேற்றுமைக்குரிய உருபு மற்ருெரு வேற்றுமையோடு மயங்குவது உருபு மயக்கம், ஒரு வேற்றுமைக்குரிய பொருள் மற்ருெரு வேற்றுமையிற் சென்று மயங்குவது பொருள் மயக்கம். இவ்விருவகை மயக்கத்தினையுங் கூறுவது இவ்வியல். அதனல் இது வேற்றுமை மயங்கியலென்னும் பெயர்த்தாயிற்று. வேற்று மைக்குச் சொல்லிய இலக்கணத்திற் பிறழ்ந்து வழுவாய் அமைத்துக்கொள்ளப்படுவனவும் பிறவுமாக வேற்றுமையொடு தொடர்புடைய விதிகள் சில ஈண்டுக்கூறப்படுதலின் வேற்றுமை மயங்கியலென்னும் இப்பெயர் பன்மை நோக்கிச் சென்ற குறி யென்றும் இதன்கண் “யாதனுருபிற் கூறிற்ருயினும்” என்ற சூத்திரத்தால் உருபு மயக்கமுணர்த்தி ஏனைச் சூத்திரங்களாற் பொருள் மயக்கமுணர்த்தினரென்றுங் கூறுவர் சேவைரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களே 35-ஆக இளம்பூரணரும் நச்சிஞர்க்கினியரும், 34-ஆகச் சேவைரையரும், 33-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இவ்வியலின் தொடக்கத்தே கருமமல்லாச் சார்பென் கிளவி (!) என்பது முதல் அச்சக் கிளவிக்கு (17)என்னும் சூத்திர முடிய வேற்றுமைப் பொருள் மயக்கம் உணர்த்தி அன்னயிறவும் (18) என்பதல்ை அதற்குப் புறனடையுங்கூறி முடித்தார். பொருள் மயக்கமாவது ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரியனவாக வேற்றுமை யியலிற் சொல்லப்பட்ட காத்தல் ஒத்தல் முதலிய அவ்வவ் வேற்றுமையின் பொருட் பகுதிகள் தமக்குரிய வேற்றுமைப் பொருளைவிட்டு நீங்காது பிறிதொரு வேற்றுமையின் பொருளின் கண்ணே சென்று மயங்குதலாம். எடுத்துக்காட்டாக ஒன்றை நோக்குவோம். இரண்டாம் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட 'காப்பின் ஒப்பின் எனவரும் பொருட் பகுதிகளுள் சார்பு பொருண்மையும் ஒன்ருகும். அது கருமச் சார்பும் கருமமல்லாச்