பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தொல்காப்பியம் நுதலியபொருள் பொருளும், சினைக்குரிய பெயரால் முதற்பொருளும், இடத்தின் பெயரால் அவ்விடத்து நிகழ் பொருளும், பண்பின் பெயரால் பண்பு கொள்பொருளும், காரணப் பெயரால் அக்காரணத்தால் இயன்ற காரியப் பொருளும், இரண்டுபெயர் தொக்கு ஒருசொல் நீர்மைப்பட்டு நிற்றலால் மற்ருெரு பொருளும், செயப்படு பொருளை யுணர்த்தும் பெயரால் வினைமுதலாகிய பொருளும் விளங்க நிற்பன ஆகுபெயர்களாம். அளவுப்பெயரும் நிறைப் பெயரும் அளக்கப்படுவதும் நிறுக்கப்படுவதுமாகிய பொருளே யுணர்த்தின் அ ைவ யு ம் ஆகுபெயரே யாம். எனவே ஒரு பொருளின் இயற்பெயர் அப்பொருளோடு தொடர்புடைய பிறிதொரு பொருளின் மேல் ஆகிவருங்கால் ஆகுபெயரெனப்படு மென்பது நன்கு புலனும். இவ் வாகுபெயர்கள் இயற்பெயராய் நின்ற காலத்துத் தமக்குரிய பொருளின் நீங்காது நின்று தம் பொருளேவிட்டுப் பிரியாத தொடர்புடைய பொருளையுணர்த்துத லும், அவ்வாறு நெருங்கிய தொடர்பின்றி அச்சொற்பொருளோடு ஒருவாற்ருன் தொடர்புடைய வேருெரு பொருளே யுணர்த்துதலும் என இவ்விரண்டியல்பினையுடையன என்பர் தொல்காப்பியர். எனவே இவ்வாகுபெயர்களெல்லாம் நின்ருங்கு நின்று தம் இயற்பெயர்ப் பொருளையும் வேறுணர்த்தி நிற்கும் ஆற்றலுடையன வென்பது பெறப்படும். இவ்வாறு இயற்பெயர்கள் தம் பொரு ளோடு தொடர்புடைய வேருெரு பொருள்மேல் ஆகிவருங்கால் அங்ங்ணம் ஆதற்குரிய பொருட்டொடர்பு ஐ முதலிய அறுவகை வேற்றுமைகளின் இடமாக நின்று தோற்றுமியல்பினதாகும். இவ்வாறு ஆகுபெயர்களெல்லாம் வேற்றுமைப் பொருள்களுடன் நெருங்கிய தொடர்புடையன என்பதை ஆராய்ந்தறிதல் வேண்டு மென்பார் வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும் என்ருர் தொல்காப்பியனா. இங்ங்ணம் ஆசிரியர் கூறியதனையுளங்கொண்டு “இவ்வாகுபெயர்கள் எழுவாய் வேற்றுமை மயக்கமென்றுணர்க” என நச்சிஞர்ககினியரும், "முதலிற் கூறுஞ் சினையறி கிளவியும் சினையிற்கூறும் முதலறிகிளவியும் பண்புகொள் பெயரும் இருபெய