பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளிமரபு 49 சிவஞானமுனிவர் கூறுங் கொள்கையே ஆசிரியர் தொல்காப் பியனுர்க்கு உடன்பாடாதல் பெற்ரும் விளிமரபு விளி வேற்றுமையது இலக்கணம் உணர்த்தினமையின் விளி மரபென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் உள்ள சூத்திரங்கள் 37. தெய்வச்சிலையார் 36-ஆகப் பகுத்து உரை கூறியுள்ளார். விளி வேற்றுமையாவது படர்க்கைப் பெயர்ப்பொருளை எதிர் முகமாக்குதலைப் பொருளாகவுடையதாகும். ஈறுதிரிதல், ஈற்றயல் நீடல், பிறிது வந்தடைதல், இயல்பாதல் என்பன விளி வேற்று மையின் உருபுகளாகக் கொள்ளத்தக்கன. விளி கொள்ளும் பெயர்கள் இவையெனவும் விளி கொள்ளப் பெயர்களிவையென வும் ஆசிரியர் இவ்வியலில் உணர்த்துகின்ருர், இ, உ, ஐ, ஒ, ன, ர, ல, ள என்பவற்றை யிறுதியாகவுடைய உயர்திணைப் பெயர்கள் விளி கொள்ளும் பெயர்களாம். ஏனைப் பெயர்கள் விளியேலா. தான், யான், நீயிர் என்பனவும் சுட்டு விளுப் பெயர்களும் த, ந, து, எ என்பவற்றை முதலாகவுடைய கிளைப் பெயர்களும் இவைபோல்வன பிறவும் விளிவேற்றுமை யோ டு பொருந்தாத பெயர்களாம். ஈறுதிரிதல்: இகரவீறு ஈகாரமாகவும் ஐகாரவீறு ஆய் எனவும் முறைப் பெயரீற்று ஐகாரம் ஆகாரமாகவும் அண்மை விளியாயின் அகர மாகவும் திரியுமென்றும், தொழிற் பெயர் பண்புகொள்பெயர் என்பவற்றின் இறுதியிலுள்ள ஆன் விகுதியும் ஆள் விகுதியும் ஆய் விகுதியாகத் திரியுமென்றும், அர், ஆர் என்பன ஈர் எனத் திரியு மென்றும் கூறுவர் ஆசிரியர்.