பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5é, தொல்காப்பியம் நுதலியபொருள் ஈற்றவல் டேல்: லகர ளகர வீற்று உயர்திணைப் பெயர்கள் ஈற்றயல் நீண்டு விளியேற்பன. பிறிது வந்தடைதல்: ஒகாரவீற்றுப் பெயரும் குற்றியலுகரவீற்றுப் பெயரும் லகர ளகரiற்று முறைப் பெயரும் ரகரவீற்றுத் தொழிற் பெயரும் பண்புகொள் பெயரும் இறுதியில் ஏகாரம் பெற்று விளிப்பன. இயல்பாதல்: இகரவீற்று அளபெடைப் பெயரும் அண்மையிலுள்ளாரை யழைக்கும் பெயரும் ஆனிற்றுப் பெயரும் ன, ர, ல, ள என்பவற்றை யிறுதியாகவுடைய அளபெடைப் பெயர்களும் இயல்பாய் நின்று விளியேற்பனவாம். இ, உ, ஐ, ஒ, ன, ர, ல, ள என்னும் எழுத்துக்களே யிறுதி யாக வுடைய அஃறிணை விரவுப் பெயர்கள் மேல் உயர்திணைப் பெயர்க்குச் சொல்லிய முறையால் விளியேற்பன வென்றும், அஃறிணைக்கண் வரும் எல்லா வீற்றுப் பெயர்களும் ஏகாரம் பெற்று விளியேற்பன வென்றும் இங்குக்கூறப்பட்ட இருதினப் பெயர்களும் சேய்மை விளிக்கண் வருங்கால் தத்தம் மாத் திரையில் நீண்டொலிப்பன வென்றும் கூறுவர் ஆசிரியர். பெயரியல் இதுகாறும் அல்வழி வேற்றுமையாகிய தொடர்மொழி யிலக்கணங் கூறிய ஆசிரியர், இனி அத்தொடர்மொழிக்கு உறுப் பாகிய தனிமொழி யிலக்கணங் கூறத் தொடங்கி முதற்கண் பெயரிலக்கண முணர்த்துகின்றர். அதல்ை இது பெயரிய லென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் 43-சூத்திரங்கள் உள்ளன. இவற்றை 41-சூத்திரங்களாக அடக்குவர் தெய்வச் சிலையார்.