பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயரியல் 器憩 எல்லாச் சொற்களும் பொருள் குறித்து வருவனவே. சொல்லாற் குறிக்கப்பட்ட பொருளைத் தெரிந்துகொள்ளுதற்கும் சொல்லைத் தெரிந்துகொள்ளுதற்கும் அச்சொல்லே கருவியாகும். சொல் பொருளுணர்த்தும் முறை வெளிப்படுநில, குறிப்புநில் யென இருவகைப்படும். சொல்லெனச் சிறப்பித்துரைக்கத் தக்கன பெயரும் வினையும் என இரண்டேயாம். இடைச் சொல் லும் உரிச்சொல்லும் பெயர் வினைகளைச் சார்ந்து தோன்றுவன என்பர் ஆசிரியர். பெயர் என்பது பொருள். பொருளை யுணர்த்துஞ் சொல் பெயர்ச்சொலெனப்பட்டது. பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிற் பண்பின் காரியம் வினையாகும். அவ்வினையை யுணர்த் துஞ்சொல் வினைச்சொலெனப்பட்டது. பெயருமாகாது வினையு மாகாது அவ்விரண்டற்கும் நடு நிகரணவாய் நிற்பன இடைச் சொற்களாம். இடை-நடு. குணப்பண்பும் தொழிற்பண்புமாகிய பொருட்பண்பை யுணர்த்துஞ் சொற்கள் உரிச்சொற்களாம். பொருட்குப் பண்பு உரிமைபூண்டு நிற்றலின் அப்பண்பினை யுணர்த்துஞ்சொல் உரிச்சொலெனப்பட்டதென்பர் சிவஞான முனிவர். உயர்திணைப் பெயரும், அஃறிணைப் பெயரும், அவ்விரு திணைக்கும் ஒத்த உரிமையுடைய விரவுப்பெயரும் எனப் பெயர்ச் சொல் மூன்று வகைப்படும். அவன், பெண்மகன், சாத்தன் என னகரவீறும், அவள், மக்கள், மகள் என ளகரவீறும், நம்பி, பெண்டாட்டி, முள்ளி என இகரவீறும், ஆடுஉ, மகடுஉ, அழிதூஉ என உகரவீறும் உயர்திணை ஆண்பால் பெண்பால் களுக்கும் அறிணைக்கும் உரியவாய் வந்தன. இப்பெயர்ச் சொற்களை வினைச் சொற்போல இன்னஈறு இன்ன பாலுக்குரித்து என ஈறு பற்றிப் பகுத்துணர்த்துதலாகாமையின் இருதிணைப் பிரிந்த ஐம்பாலுணர்த்துஞ் சொல்லாதற்குப் பெயருள் உரியன உரியவாம் என்ருர் தொல்காப்பியர்ை.