பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தொல்காப்பியம் நுதலியபொருள் இவ்வியலில் 8-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களால் உயர் திணைப் பெயர்களையும், 13-முதல் 14-வரையுள்ள சூத்திரங்களால் அஃறிணைப் பெயர்களையும், !7-முதல் 19-வரையுள்ள சூத்திரங் களால் விரவுப்பெயர் பால் விளங்க நிற்றலையும், 20-முதல் 36-வரையுள்ள சூத்திரங்களால் இரு திணைப் பொதுப்பெயர்களை யும் அவற்றின் வகையினையும் விரித்துக் கூறுவர் ஆசிரியர். அருவாளன், சோழியன் என்ருங்கு நிலம்பற்றி வழங்கும் பெயர் நிலப்பெயர். சேரன், சோழன், பாண்டியன் என்ருற்போல ஒருவன் பிறந்த குடி பற்றி வழங்குவன குடிப்பெயர். அவையத் தார், அத்திகோசத்தார் என்ருங்கு ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பலரையுங் குறித்து வழங்குவன குழுவின்பெயர். தச்சன், கொல்லன் என்ருற்போலத் தொழில்பற்றி வழங்கும் பெயர் வினைப்பெயர். அம்பர்கிழான், பேருர்கிழான் என்ருற்போல உடைமைப் பொருள்பற்றி அதனையுடையார்க்கு வழங்கும் பெயர் உடைப்பெயரெனப்படும். கரியன் செய்யன், நல்லன் தீயன் என்ருற்போல நிற முதலிய குணம் பற்றி அப்பண்புடையார்க்கு வழங்கும் பெயர் பண்புகொள் பெயராகும். தந்தையர், தாயர், தன்னையர் என அம்முறையுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயராம். பெருங்காலர், பெருந்தோளர் என்ருற்போலச் சினையுடைமைபற்றி அச்சினை யுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க்குறித்த சினை நிலைப் பெயராம். ஆயர், வேட்டுவர் முதலாகத்திணையற்றிப் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயராம். பட்டி புத்திரர் கங்கை மாத்திரர் என்ருற்போல விளையாட்டுக் குறித்து இளைஞர்கள் பகுதிபடக் கூடித் தமக்குப் படைத்திட்டுக்கொள்ளும் பெயர் கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரெனப்படும். ஒருவர், இருவர், முவர் என எண்ணுகிய இயல்புபற்றி இவ்வளவினர் என்னும் பொருளில் வழங் கும் பெயர் இன்றிவரென்னும் எண்ணியற் பெயராம்.