பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தொல் காப்பியம் சூத்திரம், ஒத்து, படலம் என்னும் மூன்றுறுப்படக்கிய பிண்டமாக இயற்றப்பெற்றது தொல்காப்பியமாகும். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களாக வகுக்கப்பட்டுளது. ஒவ்வோரதிகாரமும் ஒன்பது ஒன்பது இயல் களால் இயன்றுள்ளன. எழுத்ததிகாரம் 483-நூற்பாக்களால் இயன்றது. சொல்லதிகாரச் சூத்திரங்கள் 456; 463; 463, 453 என இளம்பூரணர், சேவைரையர், நச்சினர்க்கினியர், தெய்வ சிலையார் ஆகிய உரையாசிரியர்கள் முறையே வகுத்து உரை யெழுதியுள்ளார்கள். பொருளதிகாரச் சூத்திரங்கள் 656-ஆக இளம்பூரணர் பிரித்து உரை கூறியுள்ளார். நச்சினர்க்கினியர் கருத்துப்படி பொருளதிகாரத்தின் முதல் ஐந்தியல்களின் சூத்திரத் தொகை 248. பேராசிரியர் கருத்துப்படி பின்னுள்ள நான்கியல் களின் சூத்திரத் தொகை 417 முதல் ஐந்தியல்களின் சூத்திரங் களே 244-ஆகவும் பின் நான்கியல்களின் சூத்திரங்களை 4.12ஆகவும் இளம்பூரணர் வகுத்துரைத்துள்ளார். தொல்காப்பியச் சூத்திரங்கள் இளம்பூரணருரைப்படி 1595-எனவும், நச்சினர்க் கினியர் பேராசிரியர் உரைப்படி 16:1-எனவும், கொள்ளவேண்டி யுளது. சொல்லதிகாரத்திற்குச் சேவைரையர்கொண்ட தொகை யினையே நச்சிஞர்க்கினியருங் கொண்டார். தெய்வச்சிலையார் இம்மூவர்க்கும் வேருகச் சொல்லதிகாரச் சூத்திரம் 453-எனக் கொண்டு உரை கூறியுள்ளார். “ எழுத்ததி காரத்துச் சூத்திரங்க ளெல்லாம் ஒழுக்கிய வொன்பதோத் துள்ளும்-வழுக்கின்றி நானுற் றிருநாற்பான் மூன்றென்று நாவலர்கள் மேனுற்று வைத்தார் விரித்து" 1. "ஈண்டுச் சூத்திரமும் ஒத்தும் படலமுங் கூறிய_அதிகாரத் தானே அம்மூன்றனேயும் அடக்கி நிற்பது பிண்டமென்கின்ற னென்பது தொல்காப்பியம் என்பது பிண்டம், அதனுள் எழுத் ததிகாரம், சொல்லதிகாசம், பொருளதிகாரம் என்பன படலமெனப் படும், ஆவற்றுள் ஒத்துஞ் சூத்திரமும், ஒழிந்த இருகூறுமெனப் படும். (தொல்-செய் சூ. 484 பேராசிரியர் உரை).