பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தொல்காப்பியம் நுதலியபொருள் உயர்திணையுள் ஒருவனையும் அஃறிணையில் ஆண் ஒன்றையும் உணர்த்துதலும், ஒருமை சுட்டிய பெயர் உயர்திணையுள் ஒருவன் ஒருத்தி என்னும் இருபாலும் அஃறிணையில் ஒன்றன்பாலுமாகிய மூன்று பால்களே யுணர்த்துதலும், பன்மை சுட்டிய பெயர் இரு திணைப் பன்மையும் உணர்த்தி வருதலோடு அவற்றுள் ஒரு சாரன அஃறிணையொருமை அஃறிணைப் பன்மை உயர்திணையில் ஆண்மை பெண்மை ஆகிய இந்நான்கு பால்களையுணர்த்துதலும் உடையன என்றும் விரித்துரைப்பர் தொல்காப்பியர். பன்மை சுட்டிய பெயர் என்பதற்கு இருதிணையிலும் பன்மைப் பாலைச் சுட்டிவரும் பொதுப் பெயரென்பதே பொருள். இதுவே ஆசிரியர் கருத்தென்பது தாமென் கிளவி பன்மைக்குரித்தே' (தொல்-சொல். 181) ஏனைக்கிளவி பன்மைக்குரித்தே (தொல்சொல். 187) எனவருஞ் சூத்திரங்களால் உயர்திணைப் பலர்பாற் கும் அஃறிணைப் பலவின் பாற்கும் பொதுவாகிய நிலையினைப் பன்மையென்ற சொல்லால் அவர்கூறுதலால் நன்கு புலம்ை. பன்மை சுட்டிய பெயர்கள் தமக்குரிய இருதிணைப் பன்மையையுஞ் சுட்டி வழங்குதலே முறையாகவும் அவற்றுள் ஒருசாரன அஃறிணையில் ஒன்றன்பால் பலவின்பால் உயர்திணையில் ஆளுெருமை பெண்ளுெருமை ஆகிய இந்நான்கு பால்களையும் குறித்து வருதலுண்டென்பார், "பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவ ரென்னும் என்றிப் பாற்கும் ஒரன் னவ்வே' எனச் சூத்திரஞ் செய்தார் தொல்காப்பியர்ை. இதன்கண் என்றிப்பாற்கும் என்ற உம்மையால் பன்மை சுட்டிய பெயர் தனக்குரிய இருதிணைப் பன்மையையும் ஏற்றுவருதலை ஆசிரியர் தழீஇக் கூறினராதல்வேண்டும். இவ்வுண்மை தன்பாலேற்றலை உம்மையால் தpஇயிஞர் எனவரும் சிவஞானமுனிவர் உரைக்