பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தொல்காப்பியம் நுதலியபொருள் தும், தொழிற்பண்பையுணர்த்துஞ் சொல்லை உரிச்சொல்லென வும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியை யுணர்த்துஞ்சொல்லை வினைச்சொல்லெனவும் கூறுதல் மரபு வினைச்சொல்லாவது வேற்றுமையுருயேலாது வெளிப்படையாகவும் குறிப்பாகவும் காலத்தோடு விளங்குவதாகும். இறந்தகாலம், நிகழ்காலம் எதிர்காலம் எனக் காலம் முன்ரும். தொழில் முற்றுப்பெற்றநிலை இறந்தகாலம். தொழில் தொடங்கி முடிவுபெருது தொடர்ந்து நிகழும்நிலை நிகழ்காலம். தொழிலே தொடங்கப்பெருதநிலை எதிர் காலம். இம்முக்காலங்களுள் ஒன்றை வெளிப்படையாகக் காட்டு வனவற்றை வினையென்றும் இவற்றைக் குறிப்பாக உணர்த்துவன வற்றைக் குறிப்பு என்றும் கூறுவர் தொல்காப்பியர்ை. பிற் காலத்தார் இவற்றை முறையே தெரிநிலை வினையென்றும் குறிப்பு வினையென்றும் வழங்குவர். இவ்வினைச்சொற்கள் முற்று, வினை யெச்சம், பெயரெச்சம் என மூவகைய. பாலுணர்த்தும் ஈறு களாகிய விகுதிகளோடுகூடி நிறைந்து நிற்பன வினைமுற்றுக் களாம். ஐம்பாலவாகிய வினைமுதலைத் தரும் விகுதியுறுப்புக் குறைந்த குறைச்சொற்களாய் மற்ருெரு வினைச்சொல்லோடல் லது முற்றுப்பெருது நிற்பன வினையெச்சங்களாம். பாலுணர்த்தும் விகுதியின்றிக் குறைந்த குறைச்சொற்களாய்ப் பெயரை எச்ச மாகவுடைய வினைச்சொற்கள் பெயரெச்சம் எனப்படும். வினைச் சொற்களின் இலக்கண முணர்த்தினமையால் இது வினையிய லென்னும் பெயர்த்தாயிற்று. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 49ஆக இளம்பூரணரும் 51-ஆகச் சேவைரையரும் நச்சினர்க்கினி யரும் 54-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார் கள். எச்சவியலிலுள்ள இறப்பின் நிகழ்வின்', எவ்வயின் வினையும், அவைதாம் தத்தங்கிளவி எனவரும் மூன்று சூத்திரங் களையும் வினையிலக்கணமாதல் பற்றி இவ்வியலின் இறுதியில், தெய்வச்சிலையார் சேர்த்துரைத்தமையால் அவர் கருத்துப்படி இவ்வியலின் சூத்திரங்கள் 54-ஆயின. வினைச்சொற்களெல்லா வற்றையும் உயர்திணைக்குரியன, அஃறிணைக்குரியன, இரு