பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினேயியல் $? திணைக்குமுரியன என மூன்று வகையாக இவ்வியலில் ஆசிரியர் பகுத்துக் கூறியுள்ளார். உயர்திணைக்குரியன: உயர்திணைவினை தன்மைவினை படர்க்கைவினை என இடத் தால் இருவகைத்து. அவற்றுள் தன்மைவினை பன்மைத்தன்மை யும் தனித்தன்மையும் என இருவகைப்படும். அம், ஆம், எம், எம், கும், டும், தும், றும் என்னும் இவ்வெட்டு விகுதிகளையும் இறுதியாகவுடைய வினைச்சொற்கள் பன்மையுண்ர்த்துந் தன்மைச் சொற்களாம். தம்மைக் குறித்துப் பேசு தற்கேற்ற மொழிவளம் உயர்திணை மாந்தர்க்கே யுரியதாகலின் தன்மைச் சொற்கள் யாவும் உயர்திணைச் சொல்லேயாம். ஒருவனே ஒருத்தியோ தன்னைக் குறித்துப் பேசுங்கால் தனக்கு ஒருமையல்லது பன்மை சொல்லுதற்கிடமில்லை. எனினும் தனக்கு முன்னும் அயலிலும் உள்ள பிறரையும் தன்ைேடு உளப்படுத்துக் கூறும் வழக்கமுண் மையால் தன்மைப் பன்மையும் கொள்ள வேண்டியதாயிற்று. ஆகவே பன்மைத் தன்மை யென்றது உளப்பாட்டுத் தன்மையே யாம். தன்னெடு முன்னின்ருரை யுளப்படுத்தலும் படர்க்கையாரை யுளப்படுத்தலும் அவ்விரு திறத்தாரையும் ஒருங்கு உளப்படுத்தலும் என உளப்படுத்தல் மூவகைப்படுமெனவும், அம், ஆம் என்ற விகுதிகள் முன்னிலேயாரையும் தமராயவழிப் படர்க்கையாரையும், எம், ஏம் என்பன படர்க்கையாரையும், கும், டும், தும், றும் என்பன அவ்விருதிறத்தாரையும் உளப்படுத்துமெனவும், அம், ஆம், எம், எம் என்பன முன்று காலமும் பற்றி வருதலும் கும், டும், தும், றும் என்பன எதிர்காலம்பற்றி வருதலும் உடைய வெனவும் கூறுவர் சேவைரையா. கு, டு, து, று என், ஏன், அல் என்பவற்றை இறுதியாக வுடைய ஏழும் ஒருமையுணர்த்தும் தனித்தன்ம்ை (தன்மை யொருமை) வினைச்சொற்களாம். அவற்றுள் செய்கு என்னும்