பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தொல்காப்பியம் நுதலியபொருள் வாய்பாட்டு வினைமுற்று வினைகொண்டு முடியுமாயினும் முற்றுச் சொல்லாகிய இலக்கணத்திற் சிறிதும் மாறுபடாது. அன், ஆன், அள், ஆள் என்னும் ஈற்றையுடைய நால்வகைச் சொற்களும் உயர்திணை யொருமை யுணர்த்தும் படர்க்கை வினைச்சொற்களாம். அர். ஆர், என்னும் ஈற்றையுடைய மூவகைச் சொற்களும் பலர்பாற் படர்க்கையாம். மார் என்பதும் உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைக்கீருதலையுடைத்து. அது முடியுங்கால் பெயர்கொள்ளாது வினைகொண்டு முடியும். இவ்வாறு அம் விகுதி முதலாக மார் விகுதி யிருகச் சொல்லப்பட்ட இருபத்துமூன்றிற்று வினைச்சொற்களும் உயர்திணைக்கே யுரியன Q觐。 மேற்சொல்லப்பட்டவற்றுள் பன்மையுணர்த்தும் தன்மைச் சொல் திணைவிரவி யெண்ணுங்கால் அஃறிணையையுளப்படுத்துத் திரிதலும் உண்டு. யார் என்னும் விவிைனைக் குறிப்பு உயர்திணை முன்று பாலுக்கும் ஒப்பவுரியதாகும். பாலுணர்த்தும் ஈறுகளாகிய ன, ள, ர, என்னும் இறுதியையுடைய ஆகாரமும் முன்னிலையில் வரும் ஆய் என்பதன் ஆகாரமும் செய்யுளுள் ஒகாரமாய்த் திரியும், ஆரும் வேற்றுமைக்குரிய உடைமைப்பொருள், ஏழாம் வேற்றுமைக்குரிய நிலப்பொருள், ஒப்புப்பொருள், பண்பு என்னு மிவற்றை நிலைக்களமாகக் கொண்டும் அன்மை, இன்மை, உண்மை, வன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் வினைக்குறிப்புத் தோன்றுமென்பர் ஆசிரியர். குறிப்பாற் கால முணர்த்தலின் இது குறிப்பெனப்பட்டது. முன்னர்க் கூறிய இருபத்துமூன்றிற்று வினைச்சொற்களுக்கீருகிய எழுத்துக்களையே (விகுதிகளேயே) இவ்வினைக்குறிப்புச் சொற்களும் பெற்றுப் பாலுணர்த்துவனவாம்.