பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 3 " தோடவிழ் பூங்கோ தாய் சொல்லதி காரத்துட் கூடிய வொன்பதியற் கூற்றிற்கும் - பாடமாம் நானூற் றறுபத்து நான்கே.நன் னுற்பாக்கள் கோனுற்று வைத்த குறி.” “பூமலிமென் கூந்தால் பொருளியலின் சூத்திரங்கள் ஆவவறு நூற்றறுபத் தைந்தாகும் - மூவகையால் ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்.” எனவரும் பழைய வெண்பாக்களில் மூன்றதிகாரங்களின் சூத்திரத் தொகைகள் முறையே குறிக்கப்பட்டன. முன்ருவதாகவுள்ள வெண்பாவில் தொல்காப்பியச் சூத்திரங்களின் மொத்த எண் ணிக்கை 1610-எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனல் இரண்டாவ தாகவுள்ள வெண்பாவில் சொல்லதிகாரச் சூத்திரத்தொகை 464-எனக் குறிக்கப்பட்டதனைச் சேர்த்துப் பார்க்கச் சூத்திரத் தொகை 1612-ஆக உயர்கின்றது. தொல்காப்பிய மூலத்தை அச்சிட்டவர்கள் ஒவ்வோரதிகாரத்திற்கும் ஒவ்வோருரையாசிரியர் தொகையினை மேற்கொண்டு அச்சிட்டுள்ளார்கள். ஆகவே தொல் காப்பியச் சூத்திரத்தொகை கூடியுங் குறைந்தும் காணப்படு கிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் தாம் விரும்பியவாறு சூத்திரங்களைப் பிரித்துங் கூட்டியும் பொருள் கூறியிருத்தலை நோக்குங்கால், இந்நூல் தெளிவாக வரையறுத்துக் கற்பிக்கும் மரபினை இடைக்காலத்தில் இழந்திருத்தல் வேண்டுமெனத் தோற்றுகிறது. மூன்று தமிழ்ச் சங்கங்கள் பண்டைக் காலத்துப் பாண்டியர்கள் கல்வி வளர்ச்சி கருதிப் புலவர் பலரையும் ஒருங்கழைத்து மூன்றுமுறை தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழ் வளர்த்தார்கள் என்பது தமிழகத்தின் தொன்மை வரலாருகும். முதற் சங்கம் கடல் கொள்ளப்பட்ட தென்மதுரையில்