பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடையியல் 63 உணர்ந்துகொள்ளுதற்கு அறிகுறியாகிய இன், வற்று, முதலிய சாரியைகளை இவை எழுத்ததிகாரத்திற் சொல்லப்பட்டன. 'வினை செயல் மருங்கிற் காலமொடு வருந’ என்றது வினைச்சொல் முடிவுபெறுமிடத்துக் காலங்காட்டியும் பால்காட்டி யும் வினைச்சொல்லகத்து உறுப்பாய் நிற்பனவற்றை. இவை வினையியலுட் கூறப்பட்டன வேற்றுமைப் பொருளிடத்து உருபாய் வரும் ஐ, ஒடு, கு, இன், அது, கண் எனவரும் வேற்றுமையுருபுகள் வேற்றுமையியலிற் கூறப்பட்டன. அசைநிலையும் இசைநிறையும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்வனவும் ஆகிய மூவகையிடைச் சொறகளும் இவ்வியலின்கண்ணே உணர்த்தப்படுகின்றன. ஒப் புமையுணர்த்தும் இடைச் சொற்களாகிய அன்ன, ஆங்க முதலிய உவம உருபுகள் பொருளதிகாரத்து உவம இயலில் விரித்துரைக் கப்படும். இவ்விடைச்சொற்கள் தம்மாற் சாரப்படும் சொற்கு முன்னும் பின்னும் வருதலும் தம்மீறுதிரிதலும் பிறிதோரிடைச் சொல் தம்முன்வந்து சாரப்பெறுதலும் ஆகிய இயல்பினவாம். இவ்வியலின்கண் உணர்த்தப்படும் அசைநிலை, இசைநிறை, தத்தங்குறிப்பிற் பொருள்செய்வன என்னும் மூவகையிடைச் சொற்களுள் பொருள்புணர் இடைச்சொல்லாகிய தத்தங்குறிப்பிற் பொருள் செய்வனவற்றை முதற்கண்ணும், பொருள்புணரா இடைச்சொற்களாகிய அசைநிலை இசைநிறைகளே அதன் பின்ன ரும் உணர்த்துகின்ருர். தத்தங்குறிப்பிற் பொருள்செய்யும் இடைச் சொற்களுள் பலபொருள் குறித்த இடைச்சொற்களை 4-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களிலும், ஒருபொருள் குறித்த இடைச் சொற்களே 13-முதல் 21-வரையுள்ள சூத்திரங்களிலும் ஆசிரியர் எடுத்தோதுகின்ருர். அவர் எடுத்தோதிய இடைச்சொற்களுள் எல் என்னும் சொல் இலங்குதல் என்னும் ஒரு பொருள் குறித்த இடைச்சொல்லாகும். "எல்லென்பது உரிச்சொல் நீர்மைத்தாயி னும் ஆசிரியர் இடைச்சொல்லாக ஒதினமையான் இடைச்சொல் லென்று கோடும்" என்ருர் சேவைரையர். 'உரிச்சொல் குறைச்