பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ தொல்காப்பியம் நுதலியபொருள் சொற்களாதலின் அவையெல்லாம் உரிச்சொல்லேயா மென்றுங் கூறுவர் சிவஞான முனிவர். இதுகாறும் எடுத்துக்காட்டிய உரைக் குறிப்புக்களால் உரிச்சொல்லென்பன வினையும் குறிப்பு மாகிய சொற்களுக்கெல்லாம் பகுதியாகிய வேர்ச் சொற்களென் பதும் குறைச்சொற்களாகிய இவற்றை முதனிலையாகக்கொண்டே எவ்வகை வினைச்சொற்களும் தோன்றுவனவென்பதும் இனிது புலளுதல் காண்க. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 99-ஆக இளம்பூரணரும் 100-ஆகச் சேனுவரையரும் தெய்வச்சிலேயாரும், 98-ஆக நச்சிஞர்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளை யுணர்த்துவனவாய்ப் பெயர் வினைபோன்றும் அவற்றிற்கு முதனிலையாயும் தடுமாறி ஒருசொல் ஒருபொருட் குரித்தாதலேயன்றி ஒருசொல் பலபொருட்கும் பல சொல் ஒருபொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல்லென்றும், அவை பெயரும் வினையும்போல ஈறுபற்றிப் பொருளுணர்த்த லாகாமையின் பொருள் வெளிப்படாத சொல்லைப் பொருள் வெளிப்பட்ட சொல்லோடு சார்த்தி அச்சொற்களையே யெடுத் தோதிப் பொருளுணர்த்தப்படுமென்றும் இவ்வியல் முதற் சூத்திரத்தால் உரிச்சொற்குப் பொதுவிலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்து முறைமையும் உணர்த்தினர் ஆசிரியர். நால்வகைச் சொற்களுள்ளும் பண்புணர்த்துவனவாகிய உரிச்சொற்களே பலவாதலின் அவற்றுள் வெளிப்படப் பொரு ளுணர்த்தும் சொற்களே எடுத்துரையாது வெளிப்பட வாராத உரிச்சொற்களுள் உறுஎன்பது முதல் எறுழ் என்பதிருக நூற்றிரு பது உரிச்சொற்களை இவ்வியல் 3-முதல் 91-வரையுள்ள சூத்திரங் களால் எடுத்தோதிப் பொருளுணர்த்துகின்ருர், மேற்சொல்லப் பட்ட உரிச்சொல் எல்லாவற்றிற்கும் முன்னும் பின்னும் வந்த மொழியையறிந்து அதற்கேற்பப் பொருளுரைத்தல் வேண்டு