பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரியியல் 67 மெனவும் மேல் ஒதப்பட்ட உரிச்சொற்கு முற்கூறிய பொருணிலை யல்லது பிற பொருள் தோன்றினும் கூறப்பட்டவற்ருேடு அவற்றையுஞ் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டுமெனவும் வெளிப் பட வழங்காத சொற்களுக்கு வெளிப்படப் பழகிய சொற்களைக் கொண்டு பொளுணர்த்துங்கால் அங்ங்ணம் பொருளுணர்த்த வந்த சொற்கும் பொருள் யாது எனப் பொருளுக்குப் பொருள் வினவுவானுயின் அவ்வினு எல்லேயின்றிச் செல்லுமாதலால் பொருளுக்குப் பொருள் கூறுதலியலாதெனவும் மாளுக்கன் உணர்தற்குரிய வழிமுறையறிந்து உணர்த்தவல்லனுயின் தான் சொல்ல எடுத்துக்கொண்ட பொருள் திரியின்றி விளங்குமென வும், சொற்பொருளே உணர்தற்குரிய வாயில் இதனை யுணர் வோனது அறிவைப் பற்றுக்கோடாக வுடையதாகலான் ஒருவாற்ருனும் உணருந்தன்மை யொருவற்கில்லையாயின், ஆவனுக்குப் பைாருளுணர்த்தும் வழியில்லே யெனவும் 92-முதல் 96-வரையுள்ள சூத்திரங்களால் உரிச்சொற்குப் பொருளுணரும் முறைமையும் கூறிப்போந்தார் ஆசிரியர். பொருளோடு சொல்லுக்குத் தொடர்புடைமையின் பொரு ளுணர்த்தும் நெறியில் எல்லாச் சொற்களும் காரணமுடைய வென்பதும், இப்பொருட்கு இச்சொல் என நியமித்தற்குரிய காரணம் நுண்ணுணர்வுடையோர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்கத் தோன்ருவென்பதும் மொழிப் பொருட்காரணம் விழிப்பத்தோன்ரு' என்ற சூத்திரத்தால் அறிவுறுத்தப்பட்டன. எழுத்துக்கள் முதல் நிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து பொருட் காரணத்தை யுணர்த்துதல் இவ்வுரிச்சொல்லிடத்து இயல்பிலே யென்பார் "எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியில்பின்றே எ ன் ரு ர். இவ்வுரிச்சொற்கள் குறைச்சொற்களாதலின் நி ன் ரு ங் கு பிரிப்பின்றி நின்று பொருளுணர்த்துவனவன்றி முதல்நிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து பொருளுணர்த்தாவென்பது ஆசிரியர் கருத்தாதல் புலனும். எழுத்துப் பிரிந்திசைத்தல் இவ்வுரிச்