பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தொல்காப்பியம் நுதலியபொருள் செய்யுளாக்குதற்குரிய சொல்லாவன இயற்சொல், திரி சொல், திசைச்சொல், வடசொல் என நான்காம். அவற்றுள் இயற்சொல்லாவன செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத் திற்குப் பொருந்தித் தத்தம் பொருளின் வழுவாமல் நடக்குஞ் சொல்லாம். ஒரு பொருளைக் கருதிய பலசொல், பல பொருளைக் கருதிய ஒருசொல் எனத் திரிசொல் இருவகைப்படும். திசைச் சொல்லாவன செந்தமிழ் வழக்கைப் பொருந்திய பன்னிரு நிலங்களினும் அவ்வந்நிலத்து வாழ்வார்தம் குறிப்பினையே பொருளாகக்கொண்டு வழங்குவன. வடசொல்லாவன வட மொழிக்கே யுரிய எழுத்தினை நீங்கி இருமொழிக்கும் பொது வாகிய எழுத்தினையுறுப்பாகவுடைய சொற்களாம். சிறப்பெழுத்தா லாகிய வடசொற்கள் சிதைந்துவந்தனவாயினும் தமிழொலிக்கு ஏற்புடையவாயின் அறிஞர் அவற்றை விலக்கார் எனக் கூறுவர் தொல்காப்பியர். பெயர், வினை, இடை உரி யென மேற்கூறப்பட்ட நால் வகைச் சொற்களே செய்யுட் சொல்லாவன எனத் தெரிதல் வேண்டி இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நால்வகையாகப் பகுத்துரைக்கப்பட்டன. வடசொல்லென் பது ஆரியச்சொற்போலுஞ்சொல் என்பர் இளம்பூரணர். எனவே வடசொல் யாவும் ஆரியச் சொற்களாகவே இருக்கவேண்டு மென்ற நியதியில்லையென்பது உரையாசிரியர் கருத்தாதல் பெறப்படும். அன்றியும் ஆசிரியர் தொல்காப்பியனர் வடசொல் எனத் திசைபற்றிப் பெயர்கூறியதல்லது இன்னமொழியெனக் கூருமையானும் வடசொற்கிளவியில் வடவெழுத் தொடு பொருந்திய ஆரியச்சொல்லும் ஏனைப்பொதுவெழுத்தான் அமைந்த தமிழ்திரி சொற்களும் உள்வென்பது "வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்ம்ே" என ஆசிரியர் கூறுதலாற் பெறப்படுதலின், வடவெழுத்தான மைந்த ஆரியச்சொற்களும் பொதுவெழுத்தானமைந்த தமிழ்