பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சவியல் 71 திரிசொற்களுமாக வடநாட்டில் வழங்கிய இருவகைச் சொற் களையுமே ஆசிரியர் வடசொல்லெனத் தழுவிக்கொண்டாராதல் வேண்டும். ஆரியச்சிறப்பெழுத்தால் வருவன தமிழொலிக்கேலா மையின் வடவெழுத்தொ இ எழுத்தோடு புணர்ந்தசொல் வட சொல், என்றும் ஆரியச் சிறப்பெழுத்தாலாகிய சொற்களும் தமிழொலிக்கு இயைந்தனவாகச் சிதைந்துவரின், அவற்றையும் வடசொல்லெனத் தழுவிக்கொள்ளலாமென்றும் ஆசிரியர் கூறுத லால் தமிழோடு தொடர்பில்லாத வேற்றுமொழியொலிகள் கலத்தல் கூடாதென்னும் வரையறை இனிது புலனுதல் காண்க செந்தமிழ் நாடாவது: வையையாற்றின் வடக்கும் மருத யாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் என்பர் இளம்பூரணர் முதலியோர். இவ்வாறு உரைத்தற்குத்தக்க ஆதாரங் காணுமையானும் வையையாற்றின் தெற்காகிய கொற்கையும் கருவூரின் மேற்காகிய கொடுங்கோளுரும் மருத யாற்றின் வடக்காகிய காஞ்சியும் அன்னேர் கருத்துப்படி தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாதலானும் அவர் கூற்றுப் பொருந்தாது. "வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளுமா யிருமுதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி” எனவரும் சிறப்புப் பாயிரத்துள் வடவேங்கடத்திற்கும் தென் குமரிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி முழுவதையும் தமிழ்கூறும் நல்லுலகம் எனப் பனம்பாரளுர் சிறப்பித்தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லேகூருது தென்குமரியெனத் தெற்கெல்லே கூறிய வதனுற் குமரியின் தெற்கேயுள்ள நாடுகளையொழித்து வேங்கட மலையின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்குமாகிய தமிழகம் முழுவதையுமே செந்தமிழ்