பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தொல்காப்பியம் நுதலியபொருள் நிலமெனத் தொல்காப்பியர் காலத் தமிழ் மக்கள் வழங்கினர் எனக் கொள்ளுதலே பொருத்தமுடையதாகும். வடவேங்கடந் தென்குமரியிடைப்பட்ட தமிழகம் ஆசிரியர் தொல்காப்பியனுள் காலத்துப் பன்னிரு நிலங்களாகப் பகுக்கப்பட்டிருந்ததென்பது "செந்தமிழ்சேர்ந்த பன்னிரு நிலத்தும்" (எச்ச-ச) என அவ் வாசிரியர் கூறுதலால் இனிது விளங்கும். இப்பன்னிரு நிலங் களாவன: பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்ட நாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவா நாடு, அருவாவடதலை என்பன என்றும் இவற்றைத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பாலிறுதியாக எண்ணிக்கொள்க வென்றும் கூறுவர் சேவைரையர். "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்' என்ற தொடர்க்குச் செந்தமிழ் வழங்கும் தமிழ்நாட்டின் பகுதிய வாகிய பன்னிரு நிலங்களினும் எனப் பொருள் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். இவ்வாறுகொள்ளாது 'செந்தமிழ்நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும் எனப் பழைய வுரையாசிரியர்கள் பொருள்கொண்டு, செந்தமிழ் நிலம் வேருகவும் அதனைச் சூழ்ந்த பன்னிரு நிலங்களும் வேருகவும் கூறுப. தென்பாண்டிகுட்டம் எனத்தொடங்கும் பழைய வெண் பாவிலும் செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாடு எனக் கூறப் படுதலால் இப்பன்னிரு நாடுகளும் செந்தமிழ் வழக்கினை மேற் கொண்டவை யென்பது நன்கு விளங்கும் எனவே, இப்பன் னிரண்டின்வேருகச் செந்தமிழ் நிலமெனத் தனியே ஒரு நாடி ருந்ததென்றும் அஃதொழிந்த பன்னிரு நாடுகளும் கொடுந் தமிழ் நாடுகளாமென்றுங் கூறுதல் ஆசிரியர் தொல்காப்பியர்ைக்கு முரளுதல் தெளிக. செய்யுளகத்து மொழிகள் தம்முட்புணரும்முறைநிரல் நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என நால்வகைப்