பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சவியல் 75 சொல்லுவார் குறிப்பால் எஞ்சி நின்ற பொருளை யுணர்த்துவன வென்பர் ஆசிரியர். ஒரு சொல்லளவு எஞ்சி நிற்பன சொல் லெச்சமென்றும், தொடராயெஞ்சுவன இசையெச்சமென்றும் இங்ங்ணம் சொல்வகையானன்றிச் சொல்லுவான் குறிப்பினுல் வேறு பொருளெஞ்ச நிற்பன யாவும் குறிப்பெச்சமென்றும் கூறுப. இப்பத்தெச்சங்கட்கும் வேறு பொருள் கூறுவாருமுளர். எச்சமாவன ஒருசார் பெயரும் வினையும் இடைச்சொல்லு மாதலின் பெயரியல் முதலாயினவற்றுள் இப்பத்தையும் ஒருங் குணர்த்துதற் கிடமின்மையால் எஞ்சி நின்ற இலக்கணங்களைக் கூறும் இவ்வியலின்கண்ணே தொகுத்துக் கூறிஞர் ஆசிரியர். இவ்வாறே இவ்வியலிற் கூறிய ஏனையவற்றையும் பகுத்துணர்தல் கற்போர் கடனுகும்.