பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் மேல் எழுத்திலக்கணமுஞ் சொல்லிலக்கணமும் உணர்த்திய ஆசிரியர், அவ்விருவகை யிலக்கணங்களையுங் கருவியாகக் கொண்டு மக்கள் உணர்ந்துகொள்ளுதற்குரிய பொருள்நெறி மரபினை இவ்வதிகாரத்தில் வகுத்து விளக்குகின்ருர். அதனல் இது பொருளதிகாரமென்னும் பெயர்த்தாயிற்று. இவ்வுலகிலுள்ள காட்சிப்பொருள் கருத்துப்பொருள் ஆகிய எல்லாவற்றையும் நன்காராய்ந்து அவற்றை முதல், கரு, உரி யென மூவகைப்படுத்துணர்த்தி, இவ்வுலகத்து வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை முறையினை வகுத்துரைப்பது பொருளிலக்கண மெனப்படும் இப்பகுதி தமிழுக்கே சிறப்புரிமை யுடையதாகும். நிலமுங் காலமும் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத அடிப் படைப் பொருள்கள். எனவே அவை முதற் பொருளெனப்பட்டன. நிலமெனவே நிலத்திற்குக் காரணமாகிய நீரும், நீர்க்குக் காரண மாகிய தீயும், தீயிற்குக் காரணமாகிய காற்றும், காற்றுக்குக் காரணமாகிய ஆகாயமும் அடங்கும். காலமாவது உலக நிகழ்ச் சிக்குத் துணையாய் முன்னும் பின்னும் நடுவுமாகி என்றுமுள்ள தோர் அருவப்பொருள். அது ஞாயிறு, திங்கள் முதலிய அளவை களால் காலை, நண்பகல், எற்பாடு, யாமம், வைகறையென அறுவகைச் சிறு பொழுதுகளாகவும்; கார், கூதிர், முன்பனி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என அறுவகைப் பெரும் பொழுதுகளாகவும்; மாத்திரை, நாழிகை, நாள், திங்கள், ஆண்டு முதலிய கூறுகளாகவும் பகுக்கப்படும் நிலமும் காலமுமாகிய முதற்பொருளின் சார்பினுலுண்டாகும் புல் முதல் மக்களிருகவுள்ள உயிர்ப் பொருள்களும் ஏனை உயிரல் பொருள்களும் கருப் பொருள்களாம். இவை முதற்பொருளின்கண்ணே கருக்கொண்டு தோற்றுவனவாதலின் கருப்பொருளெனப்பட்டன. அறஞ்செய்