பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தொல்காப்பியம் நுதலியபொருள் பொருளதிகாரப் பாகுபாடு இவ்வதிகாரத்துள் முற்பட இன்பப் பகுதியாகிய கைக்கிளை முதலாகப் பெருந்திணை யிருக அகப்பொரு னிலக்கண முணர்த் தினர், அதன்பின் புறப்பொருட் பகுதியாகிய வெட்சி முதல் பாடாண்டிணை யிருகப் புறப் பொருளிலக்கண முணர்த்தினர். அதன்பின் அகப்பொருட் பகுதியாகிய களவு, கற்பு என்னும் இரு வகை யொழுகலாறுகளையும் விரித்துக் கூறினர். அதன்பின் அகமும் புறமுமாகிய இவ்வொழுகலாறுகளைப்பற்றி வரும் பொரு ரிெயல்பு உணர்த்தினர். அதன்பின் அவ்விரு பொருட்கண்ணும் குறிப்புப்பற்றி நிகழும் மெய்ப்பாடு உணர்த்தினர். பின்னர் வினை, பயன், மெய், உரு என்னும் இவைபற்றி உவமிக்கப்படும் உவமை யின் இயல்புரைத்தார். அதன்பின் எல்லாப் பொருட்கும் இட மாகிய செய்யுட்களின் இலக்கணத்தை விரித்துரைத்தார். அதனை யடுத்து வழக்கிலக்கணமாக எஞ்சிநின்ற மரபிலக்கணம் உணர்த் தினர். இம்முறையானே இப்பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட் டியல், உவம இயல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல் களேயுடையதாயிற்று. அகத்திணை, புறத்திணை என இரண்டு திணை வகுத்து, அதன்கண் கைக்கிளைமுதல் பெருந்திணை யிறுதியாக ஏழும் வெட்சிமுதல் பாடாண்டிணை யிறுதியாக ஏழும் ஆகப் பதின்ைகு பால் வகுத்து, ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி, பரிபாடல், மருட்யா என அறுவகைச் செய்யுள் வகுத்து, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், என நால்வகை நிலன் இயற்றி, சிறுபொழு தாறும் பெரும்பொழுதாறுமாகப் பன்னிரண்டு காலம் வகுத்து, அகத்திணை வழுவேழும் புறத்திணை வழுவேழுமெனப் பதின்ைகு வழுவமைத்து, நாடக வழக்கும் உலகியல் வழக்குமென இரு வகை வழக்கு வகுத்து, வழக்கிடமும் செய்யுளிடமுமென இரண் டிடத்தான் ஆராய்ந்தார். ஆதலின் இப்பொருளே எட்டு வகை