பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையியல் 79 யான் ஆராய்ந்தாரென்பாரும், இவ்வெட்டுடன் முதல், கரு, உரியும் திணதொறுமiஇயபெயரும் திணைநிலைப் பெயரும் இரு வகைக் கைகோளும் பன்னிருவகைக் கூற்றும் பத்துவகைக் கேட்போரும் எட்டு வகை மெய்ப்பாடும் நால்வகை உவமமும் ஐவகை மரபும் கூறுதலின் எட்டிறந்த பல்வகையான் ஆராய்ந்தா ரென்யாரும் என இருதிறத்தர் ஆசிரியர். அகத்திணையியல் அகத்திணைக்கெல்லாம் பொதுவிலக்கண முணர்த்துதலின் அகத்திணையியலென்னும் பெயர்த்தாயிற்று. ஒத்த அன்பினல் ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத் தமக்குப் புலகை இவ்வாறிருந்த தெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொரு ளாதலின் அதனை அகமென்ருர். அகத்தே நிகழ்கின்ற இன்பத் திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயர், இதனையொழிந்தன அன் புடையார் தாமேயன்றி எல்லார்க்குந் துய்த்துணரப் படுதலானும் இவை இவ்வாறிருந்த வெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அவை புறமெனவே படும் என்பர் நச்சினர்க்கினியர். இவ்வகத் திணையியற் சூத்திரங்களை 58-ஆக இளம்பூரணரும் 54-ஆக நச்சிஞர்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். எழுவகை அகத்திணையுள் உரிமை வகையான் நிலம்பெறு வன முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன. அந்நிலத் திடைப் பொதுவகையான் நிகழ்வன கைக்கிளை, பெருந்திணை, பாலை யென்பன. அவற்றுட் பாலைத்திணை நடுவணது எனப்பட்டு நால்வகை யொழுக்கமும் நிகழுங்கால் அந்நான்கனுள்ளும் பிரிதற்பொருட்டாய் நிற்கும். முதல், கரு, உரிப் பொருளும் உவமங்களும் மரபும் இத்தன்மையவென்பதும் இவைபோன்ற அகத்திணைக்குரிய பொதுப் பொருண்மைகளும் இவ்வியலில் உணர்த்தப்படுகின்றன. அகத்திணக்குரிய சிறப்பிலக்கணம் கள