பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையியல் 器藤 இவ்வைந்திணையொழுகலாறுகள் எல்லா நிலத்தும் எல்லாக் காலத்தும் பொதுவாக நிகழ்தற்குரியனவே, எனினும் இவை ஒவ்வொன்றுக்கும் சிறப்புரிமையுடைய நிலமும் பொழுதும் இவை யெனப் பண்டைத் தமிழாசிரியர் வரம்பு செய்து இலக்கணம் வகுத்துள்ளார்கள். புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி. செவ்வேள் எழுந்தருளிய மலையும் மலேசார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். ஐப்பசியுங் கார்த்திகையுமாகிய கூதிர்ப்பருவமும் மார்கழியுந் தையுமாகிய பின்பணிப் பருவமும் இவற்றின் நள்ளிர வும் இதற்குரிய காலமாகும். இந்நிலமுங் காலமுமாகிய முதற் பொருள் காரணமாக, இவற்றிற் கருக்கொண்டு தோன்றிய கருப்பொருள் நிகழ்ச்சிகள் துணையாக, ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவருள்ளத்திலும் புணர்தலுணர்வு தோன்றுமென்ப. இவ்வாறே மாயோன் எழுந்தருளிய காடுறை யுலகமும் கார்காலமும் அவற்றின்கண் தோன்றிய கருப்பொருள் களும் ஏதுவாக இருத்தலுணர்வும், வருணன் மேய பெருமணற் பகுதியாகிய கடற்பரப்பும் ஞாயிறு மறையும் பொழுதாகிய எற்பாடும் அங்குத் தோன்றுங் கருப்பொருளும் ஏதுவாக இரங்க லுணர்வும், வேந்தன் ஆட்சிபுரியும் வயல் சார்ந்த நிலமும் வைகறை விடியலும் அங்குள்ள கருப்பொருள்களும் காரணமாக ஊடலுணர்வும், வேனிற் காலத்து நண்பகற் பொழுதில் ஞாயிற் றின் வெப்பத்தால் நல்லியல்பிழந்து பாலையாய் மாறிய நடத்தற் கரிய வழிகளும் அங்குள்ள கருப்பொருள்களுந் துணையாகப் பிரிதலுணர்வும் மேற்பட்டுத் தோன்றுமெனத் தமிழ்ப்பொருளிலக் கண ஆசிரியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமது கூர்ந்த நுண்ணுணர்வால் ஆராய்ந்து அறிவுறுத்தியுள்ளார்கள். இவ்வாறு தொல்லாசிரியர் கண்டுணர்த்திய முதற்பொருள் கருப்பொருள்-உரிப்பொருள் என்பவற்றின் இயல்புகள், நிலமும் பொழுதுமாகிய முதற்பொருளின் சார்பாலும் அச்சூழலிற்ருேன்றிய கருப்பொருள்களின் துணையாலும் மக்களின் மனவுணர்வாகிய