பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தொல்காப்பியம் நுதலியபொருள் உரிப்பொருளொழுகலாறுகள் மாண்புற்றுச் சிறத்தலை இனிது விளக்குவனவாம். மக்களது உணர்வு அவர்கள் பிறந்து வாழும் இடத்தின் வன்மை மென்மை வெப்ப தட்பம் முதலிய நிலத்தியல்புக் கேற்பவும் காலவியல்புக்கேற்பவும் வேறுபடும் நீர்மையதென்ப தன. இக்கால அறிவியல் நூலாரும் ஏற்று வற்புறுத்துவர். நீரானது தான் சேர்ந்த நிலத்தின் தன்மையினலே நிறம் சுவை முதலிய பண்புகள் மாறுபடுதலை நாம் வெளிப்படையாக அறிகின்ருேம். நீரேயன்றி மக்களது மன நீர்மையும் நிலத்திற்கும் காலத்திற்கும் அவற்றின்கண் தோன்றிய கருப்பொருளாகிய சுற்றுச்சார்பிற்கும் ஏற்ப மாறுபடுமென்பதனைப் பண்டைத் தமிழ்ச் சான்ருேர் மன நூற் பயிற்சியால் நன்கு தெளிந்திருந்தார்கள். நிலத்தியல்பால் மக்களது மனநீர்மை திரிதலும் மக்களது மனத்தியல் பால் நிலத் தியல்பு மாறுபடுதலும் வித்தும் மரமும்போன்று ஒன்றற்கொன்று காரணகாரியங்களாம். நிலம் முதலிய புறப்பொருள்களின் தொடர்பால் மக்களது மனத்தகத்தே அன்பென்னும் உயிர்ப் பண்பு வளர்ந்து சிறத்தல் அகத்திணை வளர்ச்சியாகும். உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் என்னும் வாய்மொழிக்கேற்ப அமைந்த மக்களது மனத்தின் ஆற்றலால், புறப்பொருளாகிய நிலத்தியல்பு வளர்ந்து சிறத்தல் புறத்திணை வளர்ச்சியாகும். இவ்விருவகை வளர்ச்சியினையும் முறையே அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பவற்றிலும் புறத்திணையியலிலும் ஆசிரியர் தொல்காப்பியனுள் உய்த்துணர வைத்துள்ளார். முதல், கரு, உரி யென்னும் மூவகைப் பொருளையுந் திணை யென்ற சொல்லால் வழங்குவர் ஆசிரியர். காட்டில் முல்லையும் மலேயிற் குறிஞ்சியும் வயலருகே மருதமும் கடலருகே நெய்தலும் பெருக வளர்தல்பற்றி அந்நிலங்களை முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் பூக்களாற் பெயரிட்டு வழங்கினர். பாலை யென்பதற்கு நிலமில்லையாயினும் வேனிலாகிய காலம்பற்றி வருதலின், அக்காலத்துத் தளிரும் சினையும் வாடாமல் நிற்கும்