பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 5 வித்துப் புரந்தோர் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத் திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யிருக நாற்பத்தொன் பதின்மர். அவருட் கவியரங்கேறிஞர் மூவர் பாண்டியர். இதன் கண் அமர்ந்து தமிழாராய்ந்தோர் சேந்தம்பூதனர், அறிவுடை யரளுர், பெருங்குன்றுர்க்கிழார்,இளந்திருமாறன்,மதுரையாசிரியர் நல்லந்துவளுர், மருதனிள நாகனர், கணக்காயனர் மகளுர் நக்கீரனர் முதலிய நாற்பத்தொன்பதின்மராவர். அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினர். அவர்களாற் பாடப் பட்டன நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலாயின. அவர்களால் தமிழிலக்கண நூல்களாக உடன்பட்டு வழங்கிய நூல்கள் அகத்தியமுந் தொல்காப்பியமு மாகும். இச்சங்கம் 1850 ஆண்டுகள் நடைபெற்றது. மேற்குறித்த மூன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாற்றினையும் முதன்முதற் கூறியது இறையனர் களவியலுரையாகும். களவிய லுரை கூறும் இவ்வரலாற்றினைத் தொல்காப்பிய வுரையாசிரிய ராகிய பேராசிரியரும் சிலப்பதிகார வுரையாசிரியராகிய அடியார்க்கு நல்லாரும் உடன்பட்டு வழங்கியுள்ளார்கள். ஆகவே களவியலுரை கூறுமாறு இடைச்சங்கமிருந்தார் தொல்காப் பியனர் என்பது எல்லா ஆசிரியர்க்கும் உடன்பாடாதல் இனிது பெறப்படும். இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலாய் விளங்கிய தொல்காப்பியம் கடைச்சங்கத் திறுதியிலேயே சில பல ஆண்டுகள் பயிலப்படாது அருகியது. இறையனர் களவியல் தோன்றுதற்குக் களவிய லுரையில் காணப்படும் வரலாற்ருல் இச்செய்தி உய்த்துணரப்படுகின்றது. பாண்டியடுை பன்னீரியாண்டு வற்க்டஞ் சென்றது. மக்கள் பசியாற் பெரிதும் வாட்டமுற்றனர். பாண்டியன் தன் அவைக்