பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தினேயியல் 33 பாலேயென்னும் பெயருடைய மரம் உண்டாகலின் அச்சிறப்பு நோக்கிப் பாலையென்று பெயரிட்டார். கைக்கிளை பெருந் திணை யென்பனவற்றுக்கு நிலமும் காலமும் பகுத்தோதா மையின் பிறிதோர் காரணம்பற்றிப் பெயரிட்டார். காடும் மலேயும் ஊருங் கடலுமாகிய நானிலப் பகுதிகளும் அவற்றின் திரிபாகிய பாலையும், தம்பாற் சிறந்து வளரும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை யென்னும் பூக்களாற் பெயர் பெறுதலால் அவ் வந் நிலத்திற்குச் சிறந்தியைந்த இருத்தல், புணர்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்னும் அகவொழுக்கங்களும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் பாலே என அவ்வந் நிலத்திற்குரிய பூவின் பெயர்களே கொள்வனவாயின. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன முறையே இருத்தல்,புணர்தல்,ஊடல், இரங்கல் என்னும் ஒழுக்கத்தைக் குறித்த பெயர்களென்றும் இவ்வொழுக்கத் தின் பெயர்களே இவை நிகழும் நிலத்திற்குமாயின வென்றுங் கருதுவர் நச்சிர்ைக்கினியர். அவ்வந்நிலங்களிற் சிறப்பாக வளரும் பூவின் பெயர்களே அவை தோன்றி வளரும் நிலத்திற்கும் அந் நிலத்திற் சிறப்புரிமையுடையதாய் நிகழும் ஒழுக்கத்திற்கும் ஆகு பெயராய் வழங்கின எனக்கொள்வதே பொருத்தமுடையதாகும். இவ்வொழுக்கமெல்லாம் இல்லறம் பற்றியனவாதலாலும் மகளிர், கற்பொடு பொருந்திக் கணவன் சொற்பிழையாது இல் லிருந்து நல்லறஞ் செய்தலே முல்லையாதலாலும் அது முற்கூறப் பட்டது. புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின் புணர்தற் பொருட்டாகிய குறிஞ்சியை அதன்பின் வைத்தார். புணர்ச்சிப் பின் ஊடல் நிகழ்தலின் அதன்பின் மருதத்தை வைத்தார். மருதத்திற்குரிய பரத்தையிற் பிரிவுபோலப் பிரிவின்கண் நிகழ்வது இரங்கலாகிய நெய்தலாதலின் நெய்தலை ஈற்றின்கண் வைத்தார். என இவ்வாறு முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லிய முறைக்குக் காரணங் கூறுவர் நச்சிஞர்க்கினியர். இவ்வாறே முல்லைக்குக் காரும் மாலையும் குறிஞ்சிக்குக் கூதிர்