பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தொல் காப்பியம் நுதலிய பொருள் யாமமும், மருதத்திற்கு வைகறை விடியலும், நெய்தலுக்கு எற் பாடும், பாலைக்கு நண்பகலும் வேனிலும் சிறந்தனவாதற்கு அவ் வாசிரியர் உய்த்துணர்ந்து கூறுங் காரணங்கள் உணர்ந்து மகிழத்தக்கனவாம். குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே வேனில் வெப்பத் தால் வளங்குறைந்து நடத்தற்கரியதாய் மாறிய காலத்துப் பாலயென வழங்கப்படும். 'முல்லையுங் குறிஞ்சியும் முறைமை யிற்றிரிந்து, நல்லியில்பிழந்து, நடுங்குதுயருத்துப் பாலே யென்பதோர் படிவங் கொள்ளுங்காலை' என இளங்கோவடிகள் கூறுதலால் இவ்வழக்கின் உண்மை துணியப்படும். இளங்கோ வடிகளுக்கு நெடுங்காலம் முற்பட்டவராகிய ஆசிரியர் தொல் காப்பியனர் காலத்துப் பாலயென்னுஞ்சொல் பிரிவொழுக்க மாகிய திணையைக் குறித்து வழங்கியதேயன்றி நிலத்தைக்குறித்து வழங்கவில்லை. அவர் காலத்துக் காடுறையுலகமும் மைவரை யுலகமும் தீம்புனலுலகமும் பெருமணலுலகமும் என இவ்வுலகத்தை நான்கு நிலமாகப் பிரித்துரைக்கும் வழக்கமே நிலவியதென்பது இவ்வியல் ரு-ஆம் சூத்திரத்தால் இனிது புலனும், 'தொல் காப்பியனர் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர்; வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர். பிறர் பகவதியையும் ஆதித்தனையும் தெய்வமென்று வேண்டுவர் எனக் களவியலுரையாசிரியர் கூறுங் கூற்று இதனை வலியுறுத்தல் காணலாம். காலிற்பிரிவு கலத்திற்பிரிவு என்னும் இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றுதலும் பாலைத் திணைக்கு ஏற்புடையதாகும். ஐந்திணையொழுக்கங்கள் தத்தமக்குச் சிறப்புரிமையுடைய நிலத் தினுங் காலத்தினும் நிகழ்வதுடன் பிற நிலங்களிலும் காலங்களி லும் கலந்து நிற்றல் விலக்கப்படாது. அங்ங்ணம் கலக்குங்கால் இரண்டு நிலம் ஒருங்கு நிற்றலில்லை. உரிப்பொருளல்லாத கருப் பொருளும் காலமுதற் பொருளும் மற்றைத் திணைகளிற் சேர நிற்றலுண்டு. தலைவன் தலைவியை உடன்போக்கில் அழைத்துக்