பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தினேயியல் 35 கொண்டு பெயர்தலும், தலைமகளுடைய சுற்றத்தார் இட்ைச்சுரத் திலே தடுத்து நிறுத்துதலால் தலைவனைப் பிரிந்த தலைவி இரங்குதலுமாகிய இருவகை யொழுக்கங்களும் இடைச்சுரமாகிய ஓரிடத்திலேயே நிகழ்தலுண்டு. இவ்வாறே தலைவன் தலைவியை யெதிர்ப்படும் முதற்காட்சியும் அக்காட்சிக்குப்பின் தலைமகளுளக் குறிப்பறிந்து கூடும் உள்ளப்புணர்ச்சியும் ஓரிடத்தே நிகழ்வன வாம். முதற்பொருள் நிலமுங் காலமுமாகிய இவ்விருவகையாலும் உரிப்பொருளுக்கு இடனுய் நிற்பதாகும். தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, யாழ்வகை என்பவற்றுடன் அத்தன்மைய பிறவும் கருப்பொருள்களெனப்படும். ஒரு நிலத்திற் குரிய கருப்பொருளாகிய பூவும் பறவையும் அந்நிலத்தொடும் பொழுதொடும் வந்திலவாயினும் வந்த நிலத்தின் தன்மையுடைய னவாகக் கொள்ளப்படும், என இவ்வியல் 13-முதல் 21-வரை யுள்ள சூத்திரங்களாற் கூறுவர் ஆசிரியர். ஒருதிணைக்கண்ணே நிலத்துவாழும் மக்கட்பெயர் நிலப் பெயரும் தொழிற்பெயரும் என இருவகைப்படும். ஆயர் என்பது முல்லை நிலத்தில் வாழ்வாரைக் குறித்து வழங்கும் நிலப்பெய ராகும். வேட்டுவரென்பது வேட்டைத் தொழில் செய்வாரைக் குறித்து வழங்குந் தொழிற் பெயராகும். ஆயர் வேட்டுவர் என வரும் இப்பெயர்கள் ஆண்மக்களைப்பற்றி வருந் திணைப் பெயர் களாகும். இவர்களுள் அகத்திணை யொழுகலாற்றிற்குரியராய் வரும் தலைவரும் உளர். இவ்வாறே ஏனை நிலங்களில் வாழும் மக்கள் பாலும் அகவொழுக்கத்திற்குரியராய் வழங்கும் பெயர்கள் நீக்கப்படாவாம்; என நானில மக்களும் அகவொழுக்கத்திற் குரியராதலை 22, 23, 24-ஆம் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். தாமே பொருளிட்டி வாழ்க்கை நடத்துதற்குரிய வினைத் திறமின்றிப் பிறர்பால் தாழ்ந்து தம்முணர்வின்றித் தொண்டு செய்தொழுகுவோர் அடியோர். தம் உணர்வு மிகுதியால் தாமே