பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தொல்காப்பியம் நுதலியபொருள் தலைவன் தலைவியாகிய அகத்திணை மக்களின் ஒழுகலாறுகளே உய்த்துணர்ந்துகொள்ளச் செய்தல் உள்ளுறையின் நோக்க மாகும். யான் புலப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சி யாகிய இவ்வுவமத்தோடு புலப்படக் கூருத உவமிக்கப்படும் பொருளும் ஒத்த முடிவதாகவெனத் தன்னுள்ளத்தே கருதி, அக்கருத்தினைக் கருதியுணர் தற்கேற்ற சொல்லெல்லாம் தன் னகத்தே யமையக்கொண்டு கூறப்படுவதே உள்ளுறை யுவம மெனப்படும். வண்ணம், வடிவு, பயன், தொழில் என்னும் இவற் ருல் உவமிக்கப்படும் பொருளோடு எடுத்துக் கூறப்பட்டு வெளிப் படையாகப் பொருள் விளக்குவது ஏனையுவமமாகும். இவ்விரு வகையுவமைகளும் அகத்திணைப் பொருளுணர்ச்சிக்கு உபகாரப் படு மியல்பினை 49.முதல் 52-வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விளக்கியுள்ளார். காமக் குறிப்பிற்கு அமைதியில்லாத இளம்பருவப் பெண்ணைக் கண்டு அவளே மனைக்கிழத்தியாகப் பெறவேண்டுமென விரும்பிய ஒருவன், மருந்து பிறிதில்லாப் பெருந்துயரெய்தித் தான் அவள்பாற்செலுத்தும் அன்பின் திறமாகிய நன்மையும் அவள் அதனையுணராமையால் தனக்கிழைக்குந் தீமையும் என்னும் இரு திறத்தால் மிகப்பெருக்கிய சொற்களைத் தன்ைேடும் அவளோடுங் கூட்டிச் சொல்லி, அச்சொற்களுக்கு அவளிடமிருந்து எதிர் மொழி பெருது தானே தனக்குள் சொல்லி யின்புறும் நிலை கைக்கிளையாதற்குப் பொருந்தித் தோன்றுங் குறிப்பாம் என 53 ஆம் சூத்திரம் கூறும். எனவே, இத்தகைய கைக்கிளைக் குறிப்பு ஆடவர்க்கன்றி மகளிர்க்கு ஏலாதென்பது ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும். மடலேறுவேனெனக் கூறுதலோடமையாது மடலேறுதலும், இளமை நீங்கிய பருவத்தும் மெய்யுறுதலில் விருப்பமுடையவ ராதலும், தெளிவிக்கத் தெளியாத காமவுணர்வால் அறவழிந்து மயங்குதலும், கரைகடந்த காமத்தால் விரும்பாதவரை வலிந்து