பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையியல் 39 புணரும் வன்கண்மையும் ஆக இங்குச் சொல்லப்பட்ட நான்கும் பொருந்தாவொழுக்கமாகிய பெருந்திணைக் குறிப்புக்களாம் என 54-ஆம் சூத்திரம் கூறும் மேற்கூறிய பெருந்திணைக் குறிப்புக்கள் நான்கின் முற்பட்ட நிலைகளாகிய எருமடற்றிறமும், இளமை நீங்காத் திறமும், தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறமும், மிக்க காமத்தின் மாருகாத்திறமும் ஆகிய நான்கும் முன்னர்க் கூறப்பட்ட கைக்கிளேக்குரியன வென்பது 55-ஆம் சூத்திரத்தாற் கூறப் பட்டது. இங்குக் கைக்கிளைக்குரியனவாகக் கூறப்பட்ட நான்கினே யும் முறையே வெளிப்பட இரத்தல், நலம் பாராட்டல், புணரா விரக்கம், நயப்புறுத்தல் என விளக்குவர் இளம்பூரணர். நாடக வழக்காகிய புனைந்துரை வகையாலும் உண்மையான் நிகழும் உலகியல் வழக்காலும் புலவராற் பாடுதற்கமைந்த அகத்திணை யொழுகலாருகிய புலனெறி வழக்கம், கலியும் பரி பாடலுமாகிய இருவகைப் பாவினும் நடத்தற்குரிமை யுடையது என 56-ஆம் சூத்திரம் கூறும். உலகியலில் அன்பிளுல் நிகழும் அகத்திணை யொழுகலாற்றினைச் சொல்லோவியமாகப் புனைந்து காட்ட எண்ணிய நல்லிசைப் புலவர்கள், அவ்வொழுக்கவுணர்வு கள் மக்களுள்ளத்தே தோன்றுதற்குரிய சார்பாகப் புறத்தே தோன்றும் மரம், செடி, கொடி, விலங்கு, பறவை முதலிய கருப் பொருள்களையும் அவற்றுக்கு நிலைக்களய்ை விளங்கும் நிலமுங் காலமுமாகிய முதற்பொருள்களையும் புனைந்து காட்டி, அவை சார்பாகத் தாம் அறிவுறுத்த எண்ணிய இன்ப துன்ப வுணர்வு களைத் தெளிய விளக்குவர். மனத்தால் எண்ணியுணர்தற்குரிய வாழ்க்கை யுணர்வுகளைச் சொல்லாற் புனைந்துரைத்து ஐம்பொறி வாயிலாகக் காணும் உருவாக்கிக் காட்டுதல் நாடக வழக்கின் பாற்பட்டதாம். பல்வேறிடங்களிலும் பல்வேறு காலத்தும் நிகழ்ப வற்றையெல்லாம் ஓரிடத்து ஒரு காலத்துத்தொகுத்துத் தொடர்பு பட்ட கதையாக நிகழ்த்திக் காட்டுதல் நாடகத்தின் இயல்பாகும். இதன்கண் புனைந்து காட்டப்படுவனவும் நிகழாதன அல்ல,